சியோமி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக உருவாகி வரும் Mi8 மே 31-ம் தேதி ஷென்சென் நகரில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.சியோமி நிறுவனத்தின் எட்டாவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Mi 8 என அழைக்கப்படுகிறது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் சியோமி சொந்தமாக உருவாக்கிய 3D முக அங்கீகார தொழில்நுட்பத்தை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய Mi8 ஸ்மார்ட்போனின் சிறிய டீசர் வீடியோ இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய வீடியோவில் சியோமியின் Mi8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் மற்றும் 3D முக அங்கீகார வசதிகளை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இதன் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Xiaomi Mi 8 – 6.2 அங்குல அளவுடைய Full HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இதனுடன் Qualcomm Snapdragon 845 Processor, பிரதான நினைவகமாக 6GB ஜிபி ரேம்( RAM) , 64GB இன்டெர்னல் மெமரி என்பனவும் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம், 3D முக அங்கீகார தொழில்நுட்பம் மற்றும் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை தவிர 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கேமரா, தலா 16 மெகாபிக்சல்களை உடைய டுயல் பிரதான கேமராக்கள், 3300 mAh எம்ஏஹெச் பேட்டரி ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

சியோமி நிறுவனத்தின் Mi8 ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும் என்பதால் இதில் பிரீமியம் அம்சங்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

DdyMi7LVMAM8q0I

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்