ஈரானின் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசீம் சூலேமானி அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார்.

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் சூலேமானியை கொன்றதை அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் உறுதிபடுத்தியது.

சூலேமானி கொல்லப்பட்ட செய்தி வெளியானவுடன் ட்வீட் செய்த அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கக் கொடியின் படத்தை பகிர்ந்துள்ளார்.

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா இச்செயலை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் உடனடியாக டிரம்ப் உத்தரவின்படி சுமார் 750 அமெரிக்க ராணுவ வீரர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் களம் இறக்கப்பட்டுள்ளனர். இதனால், அமெரிக்கா- ஈரான் இடையே போர் மூளும் பதற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இதனிடையே, ”இந்த தாக்குதலை நடத்திய குற்றவாளிகளுக்கு கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை காத்திருக்கிறது” என்று ஈரானின் அதிஉயர் தலைவர் ஆயடூலா அலி காமனேயி எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், டிவிட்டரில் #WWIIIஹேஷ்டேக் உலகஅளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டங்களே இன்னும் முடியாத சூழலில் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள போர் பதற்றம் உலக நாடுகளை கதிகலங்க  செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here