#WorldPhotographyDay; குப்பை பொறுக்கி டெல்லி தெருக்களில் வாழ்ந்து புகைப்படக் கலைஞராக முன்னேறிய இளைஞர் …ஃபோர்ப்ஸ் பத்திரிகையில்…

0
154
Vicky Roy

குப்பைப் பொறுக்கி டெல்லி தெருக்களில் வாழ்ந்து வந்த இளைஞர் ஒளிப்பட கலைஞராக முன்னேறி  ஃபோர்பஸ் ஆசிய பத்திரிகை வெளியிட்ட ’30 வயதிற்குட்பட்ட 30 பேர்’ பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்.   அவரது வாழ்க்கைப் பற்றிய பதிவு  ஃபேஸ்புக்கில் வைரலாகியுள்ளது. அவரது பெயர் விக்கி தாய். அவரது பதிவு Humans Of Bombay பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. 

ஃபோர்பஸ் பத்திரிகையில் இடம் பெற்ற விக்கி ராய் தன்னுடைய வாழ்க்கையை பிரபலான ‘ஹியுமன்ஸ் ஆஃப் பாம்பே’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களின்  லைக்குகளை பெற்றுள்ளது. 

“When I was 3, my parents left me with my grandfather, but he’d often beat me up. I used to hear about people leaving…

Humans of Bombay यांनी वर पोस्ट केले सोमवार, १२ ऑगस्ट, २०१९

 அந்த பதிவில்  சிறந்த வாழ்க்கை கிடைக்கும் என்று விக்கி ராய் தனது 11 வயதில் வீட்டைவிட்டு ஓடி டெல்லிக்கு வந்துள்ளார். ஆனால் இங்கு வந்த போது குப்பை பொறுக்கியும்,  ரயில்களில் தண்ணீர் விற்றும் தெருக்களில் தூங்கினேன். 

ஒருக்கட்டத்தில் நான்  தாபாவில் பாத்திரம் கழுவி அங்கு சாப்பிட்டவர்கள் மிச்சம் வைப்பதை சாப்பிட்டு வந்தேன் . நான் சுத்தமில்லாத உணவுகளை உண்டதால் எனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது . அப்போது ஒரு டாக்டரை சந்தித்தேன் அவர்  கைவிடப்பட்ட குழந்தைகளை மறுவாழ்வுக்கு உதவும் ‘சலாம் பாலக்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை பற்றி எனக்கு கூறினார்.

அவர்கள் எனக்கு 3 வேளை உணவும், தங்க இடமும், துணியும், கல்வியும் அளித்தனர். 

இந்நிலையில் பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் எங்களை பார்க்க வந்தார் அவரின் ஒளிப்படங்களை நான் பார்த்தபோது அவற்றால் ஈர்க்கப்பட்டேன்.  

தெருக்களில் வாழ்ந்ததால் மனித நேயத்தை பற்றிய புரிதல் எனக்கு இருந்தது அதனால் மனித நேயத்தை ஒளிப்படத்தில் காட்ட விரும்பினேன். 

18 வயதில் தன்னார்வ தொண்டு நிறுவனம் எனக்கு  ரூ.499 மதிப்புள்ள கேமரா ஒன்றினை கொடுத்தது. உள்ளூர் ஒளிப்படக் காரருடன் இண்டர்ஷிப் செய்தேன்  அதன் பிறகு என் லட்சியத்தில் இருந்து பின்வாங்கவில்லை. 

 என்னுடைய ஒளிப்படக் கண்காட்சியை ‘ஸ்ட்ரீட் ட்ரீம்ஸ்’ என்ற தலைப்பில் வைத்தேன் . “மக்கள் என் புகைப்படங்கள் வாங்கத் தொடங்கினார்கள். நான் நியூயார்க், லண்டன் என்று உலகம் முழுவதும் பயணம் செய்தேன் . இப்போது என்னுடைய ஒளிப்படங்களை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். வாழ்க்கையில் நம்பிக்கை வேண்டும். நான் ஒன்றுமில்லாதவனாக இருந்து இந்த உயரத்திற்கு வந்துள்ளேன். இந்த அளவிற்கு என் வாழ்வின் விதியை மாற்ற முடியும் என்று நினைத்து பார்த்ததில்லை . எப்போது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 

அவரது வலைத்தளத்தில் கிடைத்த தகவல்படி 2014 ஆம் ஆண்டில் எம்.ஐ.டி மீடியா ஃபெல்லோஷிப் வழங்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் ஃபோர்பஸ் ஆசியா 30இன் கீழ் 30 பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.