சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஒரு நாள் கொண்டாட்டமும் பெண்களிடம் கூறப்படும் வாழ்த்துக்களும் அவர்களுக்கான அங்கீகாரத்தையும் சமத்துவத்தையும் ஆண்டு முழுவதும் உள்ள நாட்களில் கிடைக்கச் செய்து விடுவதில்லை. இந்தியா போன்ற நாட்டில் சமத்துவம் என்ற வார்த்தையை யாராவது உச்சரித்தாலே பெண்ணியவாதி என்ற சாயத்தைச் சமூகம் பூசிவிடுகிறது. ஆனால் திரைத்துறை பிரபலங்களின் துணிச்சல் பேச்சு அண்மைக்காலங்களில் சமூக விவாதங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : #womensday: வாக்களிக்கும் பெண்களுக்கு மரியாதை; ஆனால் நிஜத்தில்?

அனுஷ்கா சர்மா, கங்கனா ரனாவத், சோனம் கபூர், வித்யா பாலன் போன்ற நாயகிகள் தங்களின் கருத்துகளை மறைக்காமல் நெத்தியில் அடித்தாற்போல சொல்பவர்கள். இந்த மகளிர் தினத்திற்கான செய்தியை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையிலான வாக்கியம் கொண்ட ஆடையை அனுஷ்கா சர்மா அணிந்து வந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அனுஷ்கா சர்மா அணிந்திருந்த டி ஷர்ட்டில் ”நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்” என எழுதப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் இருக்கும் பாலின பாகுப்பாட்டைக் களைந்திட வேண்டும் என்ற அவரது குரலாகதான் எதிரொலிக்கிறது.

இதையும் படியுங்கள் : #womensday: ”வங்கிகளில் கழிவறை இல்லை; ஸ்வச் பாரத் பற்றி பெருமையாக பேசுவது வருத்தமாக உள்ளது”; மோடிக்கு கடிதம் எழுதிய பெண்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்