இந்தியாவில் விவோ நிறுவன ஸ்மார்ட்போன் மாடலுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

விவோ நிறுவனத்தின் விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் விலை திடீரென குறைக்கப்பட்டது. இந்தியாவில் அறிமுகமாகி நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், வி20 எஸ்இ ஸ்மார்ட்போனிற்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. விலை குறைப்பின் படி விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் ரூ. 19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய விலை குறைப்பு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் அமலாகி இருக்கிறது. எனினும், புதிய விலை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் இதுவரை பிரதிபலிக்கவில்லை. விவோ வி20 எஸ்இ மாடலில் 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED ஹாலோ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4100 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனை 0 முதல் 62 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.

vivo V20 SE is Now Official. Priced RM 1,199 - The Ideal Mobile

விவோ வி20 எஸ்இ சிறப்பம்சங்கள்


 • – 6.44 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
 • – ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 11nm பிராசஸர்
 • – அட்ரினோ 610 GPU
 • – 8 ஜிபி ரேம்
 • – 128 ஜிபி மெமரி
 • – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • – ஆண்ட்ராய்டு 10 மற்றும் பன்டச் ஒஎஸ் 11
 • – டூயல் சிம்
 • – 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி பிளாஷ்
 • – 8 எம்பி 120° வைடு ஆங்கில் கேமரா, f/2.2
 • – 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
 • – 32 எம்பி செல்பி கேமரா, f/2.0
 • – இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
 • – 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
 • – டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
 • – யுஎஸ்பி டைப் சி
 • – 4100 எம்ஏஹெச் பேட்டரி
 • – 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here