#Vijay65: முருகதாஸ் நீக்கம்?: சன்பிக்சர்ஸ் அதிரடி

0
161

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கும் நிலையில் விஜய்யின் 65-வது படம் குறித்த தகவல்கள் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. 

முருகதாஸ் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி 65 படத்தில் இருந்து விலகி உள்ளதாகவும் நீக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதே நேரம் வெற்றிமாறன் விஜய்யின் 65-வது படத்தை இயக்கப்போவதாகவும் தகவல்.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும், தயாரிப்பு தரப்பு சில மாற்றங்களை செய்யசொன்னதாம். அதில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு உடன்பாடு இல்லாததால் அவர் அப்படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என ஹாட்ரிக் வெற்றிகளைக் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி 65 படத்திலிருந்து விலகி உள்ளதாக வரும் தகவல்களால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இது வெறும் வதந்தியே என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.  

உண்மை என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here