#VIJAY65 படப்படிப்பு பூஜையுடன் தொடங்கியது

0
307

தொடங்கியது #VIJAY65… ஸ்டைலிஷ் விஜய்யுடன் பிக்பாஸ் கவின்… பூஜையில் பூஜா ஹெக்டே மிஸ்ஸிங்!

நெல்சனின் மூன்றாவது படமாக #Vijay65-ன் ஷூட்டிங் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. சென்னையில் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கும்நிலையில், தேர்தலுக்குப்பின்னர் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

கோலமாவு கோகிலா’  ‘டாக்டர்’ படங்களை அடுத்து நெல்சனின் மூன்றாவது படமாக #Vijay65-ன் ஷூட்டிங் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. 

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிக்பாஸ் கவின் நடிக்கயிருக்கிறார். அவர் இன்று பூஜையில் கலந்துகொண்டிருக்கிறார்.

நண்பன் , ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ உள்பட பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரம்ஹம்சாதான் விஜய் 65 படத்துக்கும் ஓளிப்பதிவு செய்கிறார்.

இன்று நடைபெற்ற பூஜையில் விஜய், இயக்குநர், தயாரிப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்ட நிலையில் படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டே கலந்துகொள்ளவில்லை. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here