ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

நியூசிலாந்தில் நடைபெற்று வந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக எட்வர்ட்ஸ் மற்றும் பிரியண்ட் ஆகியோர் களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் எடுத்தநிலையில், பிரியண்ட் அவுட்டாகி வெளியேறினார். அவர் 26 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, எட்வர்ட்ஸ், சங்கா ஆகியோரும் அவுட்டாகி வெளியேறினர்.

மெர்லோ
மெர்லோ

59 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் பின்னர் நிதானமாக ஆடிய ஆஸ்திரேலிய வீரர் மெர்லோ இந்திய அணி பந்துவீச்சாளர் ராய் வீசிய பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அவர், 102 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்தார். இதில் ஆறு பவுண்டரிகள் அடங்கும்.

2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷிவா சிங்
2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷிவா சிங்

இதனைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் போரேல், ஷிவாசிங், நாகர்கோட்டி மற்றும் ராய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

CRICKET-WORLD-U19-AUS-IND

இதனையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கல்ரா மற்ரும் பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். இந்திய அணி 23 ரன்கள் எடுத்திருந்தநிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. இதன் பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

சதமடித்த கல்ரா
சதமடித்த கல்ரா

இந்திய அணியின் ஸ்கோர் 71ஆக இருந்தபோது, பிரித்வி ஷா அவுட்டானார். அவர் 41 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த்தார். அதேபோன்று சுப்மன்கில் 31 ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் கல்ரா மற்றும் தேசாய் நிதானமாக ஆடி அணியின் வெற்றிக்கு உதவினர். கல்ரா 102 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று சிக்சர்களும், எட்டு பவுண்டரிகளும் அடங்கும். தேசாய் 61 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 38.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்து உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இந்திய அணி 2000, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்திய அணி பட்டம் வென்றிருந்தது. மேலும் உலகக் கோப்பையில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாகவும் இந்தியா உள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்