தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் காலியாகவுள்ள 9351 பணியிடங்களுக்கானத் தேர்வு, அடுத்தாண்டு பிப்.11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் டிச.13ஆம் தேதி விநியோகிக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்புகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் முழு விவரங்களை http://www.tnpsc.gov.in/notifications/2017_23_ccse4-notfn-english.pdf இந்தப் பக்கத்தில் காணலாம்.

இதையும் படியுங்கள்: பணமதிப்பிழப்பை விமர்சித்து பாடல் – உண்மையை சொல்ல பயந்தது இல்லை என சிம்பு பேச்சு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்