தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (நேற்று), தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சென்னை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 36 பேர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் 27 பேர் மீட்கப்பட்டு, தேனி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காட்டுத்தீயில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்களில் சென்னையைச் சேர்ந்த நிஷா என்பவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்