தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதி காட்டுத்தீயில் சிக்கியவர்களில் எட்டு பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (நேற்று), தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சென்னை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 36 பேர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் பலர் சிக்கிக் கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மற்றும் வனக்காவலர்கள், ஊர்மக்களுடன் இணைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்டவர்கள் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

காட்டுத்தீயில் சிக்கியவர்களில் எட்டுபேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் சடலங்கள் காணப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்