#ThalapathyVijay: #Master: க்விட் பண்ணுடா லிரிக்கல் வீடியோ

0
90

நடிகர் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரக் காத்திருக்கிறது மாஸ்டர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அனிருத் இன்று(வெள்ளிக்கிழமை) தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் படத்தில் வரும்  க்விட் பண்ணுடா   பாடலின் லிரிக்கல் வீடியோ மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டப்பட்டது.

இந்நிலையில் அறிவித்தபடி லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

மாஸ்டர் படத்தை கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியே வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக அது தள்ளிப்போடப்பட்டது. அதன் பிறகு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டு அதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு கார்த்தியின் சுல்தான் படமும் வெளியாகக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி 800 படத்தில்  நடிக்க பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விஜய் சேதுபதியால் மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்கு ஒரு சில அரசியல் கட்சிகளால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமோ என்று விஜய் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here