Sunday, July 21, 2019
Home Tags #MK_Stalin

Tag: #MK_Stalin

மத்திய பட்ஜெட்: ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கசப்பையும் கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கியிருக்கிறது. –...

ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு கசப்பையும் கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் மத்திய பட்ஜெட்  வழங்கியுள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக திமுக...

சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும்: ஸ்டாலின்

தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பஞ்சம் உட்பட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, உடனடியாக தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தை நடத்திட தமிழக அரசு நடவடிக்கை...

பாஜகவுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன் என்பதை நிரூபித்தால் அரசியலில் இருந்து...

“மோடியுடனும் ஸ்டாலின் பேசி வருகிறார்.  பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்துதான் எங்களுடன் பேசி வருகிறார்” என்று “பச்சைப் பொய்” நிறைந்த ஒரு பேட்டியை பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோல்வியின் விளிம்பிற்கு சென்று விட்ட பா.ஜ.கவிற்கு இதுபோன்றுகுழப்பங்களை விதைப்பது கைதேர்ந்த விளையாட்டு. ஆனால் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த திருமதி தமிழிசை சவுந்திரராஜன் இப்படியொரு “பொய்” பேட்டியைஅளிப்பதற்காக தன்னை இந்த அளவிற்கு தரம் தாழ்த்திக் கொண்டு விட்டாரே என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன். காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தியை முதன்முதலில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது திராவிட முன்னேற்றக் கழகம் தான். அதே நேரத்தில் ஐந்தாண்டு காலத்தில்மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தை அளித்த பிரதமர் திரு நரேந்திர மோடியை “பாசிஸ்ட்” “சேடிஸ்ட்” “சர்வாதிகாரி” என்று முதன்முதலில்  விமர்சித்தது மட்டுமின்றி, “மீண்டும்இந்தியாவின் பிரதமராக திரு நரேந்திர மோடி வரவே கூடாது” என்று சென்னையில் மட்டுமல்ல - கல்கத்தாவிலும், டெல்லிலும் மாறி மாறி பிரச்சாரம் செய்தவனும் அடியேன்தான். தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியிலும் அதே பிரச்சாரத்தை செய்திருக்கிறேன். நடைபெறவிருக்கின்ற நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் மே 23 ஆம்தேதியுடன் பிரதமர் திரு மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்பதை உறுதியாகவும், இறுதியாகவும் பேசி வருகிறேன். இதைப் பொறுக்க முடியாத பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் கடைந்தெடுத்த அரசியல் கயமைத்தனம் மூலம் அ.தி.மு.கவை மிரட்டி கூட்டணி வைத்தது போல், இட்டுக்கட்டிய பேட்டிகளைகற்பனைக் குதிரைகள் போல் தட்டி விட்டு தி.மு.க.வை வம்புக்கு இழுக்க முயற்சிக்கிறார்கள். தி.மு.க.வின் வெற்றியும், அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றியும் அந்த அளவிற்குபா.ஜ.க.வை மிரட்டி விட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடி உள்ளிட்ட மேலிடப் பா.ஜ.க. தலைவர்களின் சுயநலனுக்கு திருமதி தமிழிசை சவுந்திரராஜன் கடைசிக்கட்டமாகபகடைக்காயாக ஆக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா முதல்வர் திரு சந்திரசேகர் ராவ் அவர்கள் இப்போது முதன்முதலாக என்னை வந்து பார்க்கவில்லை. இதற்கு முன்பும் வந்து சந்தித்து விட்டுச் சென்றிருக்கிறார். இந்த முறைஅவர் சந்தித்து விட்டுச் சென்றவுடனையே “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று தி.மு.க. தலைமைக் கழகத்திலிருந்து தெளிவான பத்திரிக்கைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குழப்பவாதிகள் அப்போதாவது குறிப்பறிந்திருக்க வேண்டும். ஆனாலும் “மரியாதை நிமித்தமான சந்திப்பிற்கு” காது மூக்கு வைத்து, பூச்சூடி பொட்டு வைத்து வெளியில் விட்டால்தி.மு.க.விற்கு விழும் சிறுபான்மையின வாக்குகளை இந்த நான்கு இடைத்தேர்தல்களில் தடுத்து விடலாம்- சிதறடித்து விடலாம் என்றும், மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கின்ற நிலையில் திரு ராகுல் காந்தி அவர்களை பிரதமராக முன்னிறுத்திய தி.மு.க.வின் பிரச்சாரத்தை முனை மழுங்கச் செய்து விடலாம் என்றும் “தப்புக் கணக்கு”ப்போட்டு திருமதி தமிழிசை இந்த பேட்டியை திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு கொடுத்திருக்கிறார். குறிப்பாக அ.தி.மு.க அமைச்சர் திரு ஜெயக்குமார் சொன்னதை திருமதி தமிழிசைசவுந்திரராஜன் வழி மொழிந்திருக்கிறார் என்றால் ஊழல் அ.தி.மு.கவை எப்படியாவது இந்த நான்கு இடைத் தேர்தலிலாவது தோல்வியடைய விட்டுவிடக் கூடாது என்று “போகாதஊருக்கு பொய்யான வழி தேடியிருக்கிறார்”! “உனக்கு நான்”, “எனக்கு நீ” என்று ஊழல் அ.தி.மு.கவும், மதவாத பா.ஜ.க.வும் கச்சை கட்டிக் கொண்டு “தி.மு.க தலைமையிலான”கொள்கைக் கூட்டணிக் குளத்தில் கல் எறியும் இந்த முயற்சி படு தோல்வியடையும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநிலத்தில் நம் ஆட்சி; மத்தியில் நாம் ‘கை’ காட்டும் ஆட்சி: ஸ்டாலின்

மாநிலத்தில் நம் ஆட்சி.  மத்தியில் நாம் 'கை' காட்டும் ஆட்சி என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின்...

ஸ்டாலினுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரச்சாரங்களில் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக பேச தடை கோரிய வழக்கில் ஸ்டாலினுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

போலீஸ் வாகனத்தில் அதிமுக பணத்தை எடுத்துச் செல்கிறது – முக ஸ்டாலின்

அதிமுகவினர் வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணத்தை காவல்துறை வாகனத்திலேயே கொண்டு செல்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி...

துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள...

திமுக எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல: மு.க.ஸ்டாலின்

சமூகம் மேம்பட அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம், ஒற்றுமையை நிலை நாட்ட உறுதி ஏற்போம் என்றும், திமுக எந்த மதத்திற்குபம் எதிரானது அல்ல என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று திமுக தலைவரும், தமிழக...

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை அடிமைத்தனமாக...

5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவினை உடனடியாக அதிமுக அரசு கைவிட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஐந்து...

காவல்துறையில் ‘டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம்’ டெண்டரில் ரூ.88 கோடி முறைகேடு: முதல்வர் பழனிசாமி –...

காவல்துறையில் ரூ.88 கோடி டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, முதல்வர் பழனிசாமி - டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "முதல்வர் எடப்பாடி...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe
- Advertisement -

Advertisements

உங்களுக்கு பார்சல் அனுப்பணுமா? காய்கறி வேணுமா? கறி வேணுமா? உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300

The Royal Experience Is For Real At XS Real : Luxury at Affordable Costs


Is Coffee good for weight loss?


What is GERD?


Hernia Surgery


தொழில்நுட்பம்

இலக்கியம்