Thursday, June 27, 2019
Home Tags Dmk

Tag: dmk

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தருவதா? மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் 

தமிழகத்தைச் சகாரா பாலைவனமாக்கும் விதத்தில், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குத் தொடர்ந்து அனுமதியளிக்கும் முடிவினை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,...

சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும்: ஸ்டாலின்

தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பஞ்சம் உட்பட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, உடனடியாக தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தை நடத்திட தமிழக அரசு நடவடிக்கை...

வெற்றிடம் அல்ல இது; ஸ்டாலின் இருக்கக்கூடிய இடம் என்பதை தமிழக மக்கள் காட்டியிருக்கிறார்கள்

வெற்றிடம் வெற்றிடம் என்று சொன்னார்கள். வெற்றிடம் அல்ல. இது ஸ்டாலின் இருக்கக்கூடிய இடம் என்பதை தமிழக மக்கள் காட்டியிருக்கிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின்...

ஜூன் 3ல் திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்: க....

திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார். 

தமிழ்நாட்டு மக்களின் வெற்றி

மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், மக்கள் நல அரசு ஆகிய மூன்று மந்திரங்களை இறுகப் பிடிக்கும் அரசியல்ஆளுமைகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் வெற்றியைப் பரிசளிக்கிறார்கள். 17வது நாடாளுமன்றத்தேர்தலில் (2019) 38 தொகுதிகளில் 37...

தமிழக இடைத்தேர்தல்: திமுக 13; அதிமுக 9 இடங்களில் வெற்றி

தமிழகத்தில் ஆம்பூர், ஆண்டிப்பட்டி, அரவக்குறிச்சி, குடியாத்தம், அரூர், ஓசூர், மானாமதுரை, நிலக்கோட்டை, ஓட்டப்பிடாரம், பாப்பிரெட்டிபட்டி,  பரமக்குடி, பெரம்பூர், பெரியகுளம், பூந்தமல்லி, சாத்தூர், சோளிங்கர்,...

பாஜகவுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன் என்பதை நிரூபித்தால் அரசியலில் இருந்து...

“மோடியுடனும் ஸ்டாலின் பேசி வருகிறார்.  பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்துதான் எங்களுடன் பேசி வருகிறார்” என்று “பச்சைப் பொய்” நிறைந்த ஒரு பேட்டியை பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோல்வியின் விளிம்பிற்கு சென்று விட்ட பா.ஜ.கவிற்கு இதுபோன்றுகுழப்பங்களை விதைப்பது கைதேர்ந்த விளையாட்டு. ஆனால் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த திருமதி தமிழிசை சவுந்திரராஜன் இப்படியொரு “பொய்” பேட்டியைஅளிப்பதற்காக தன்னை இந்த அளவிற்கு தரம் தாழ்த்திக் கொண்டு விட்டாரே என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன். காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தியை முதன்முதலில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது திராவிட முன்னேற்றக் கழகம் தான். அதே நேரத்தில் ஐந்தாண்டு காலத்தில்மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தை அளித்த பிரதமர் திரு நரேந்திர மோடியை “பாசிஸ்ட்” “சேடிஸ்ட்” “சர்வாதிகாரி” என்று முதன்முதலில்  விமர்சித்தது மட்டுமின்றி, “மீண்டும்இந்தியாவின் பிரதமராக திரு நரேந்திர மோடி வரவே கூடாது” என்று சென்னையில் மட்டுமல்ல - கல்கத்தாவிலும், டெல்லிலும் மாறி மாறி பிரச்சாரம் செய்தவனும் அடியேன்தான். தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியிலும் அதே பிரச்சாரத்தை செய்திருக்கிறேன். நடைபெறவிருக்கின்ற நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் மே 23 ஆம்தேதியுடன் பிரதமர் திரு மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்பதை உறுதியாகவும், இறுதியாகவும் பேசி வருகிறேன். இதைப் பொறுக்க முடியாத பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் கடைந்தெடுத்த அரசியல் கயமைத்தனம் மூலம் அ.தி.மு.கவை மிரட்டி கூட்டணி வைத்தது போல், இட்டுக்கட்டிய பேட்டிகளைகற்பனைக் குதிரைகள் போல் தட்டி விட்டு தி.மு.க.வை வம்புக்கு இழுக்க முயற்சிக்கிறார்கள். தி.மு.க.வின் வெற்றியும், அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றியும் அந்த அளவிற்குபா.ஜ.க.வை மிரட்டி விட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடி உள்ளிட்ட மேலிடப் பா.ஜ.க. தலைவர்களின் சுயநலனுக்கு திருமதி தமிழிசை சவுந்திரராஜன் கடைசிக்கட்டமாகபகடைக்காயாக ஆக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா முதல்வர் திரு சந்திரசேகர் ராவ் அவர்கள் இப்போது முதன்முதலாக என்னை வந்து பார்க்கவில்லை. இதற்கு முன்பும் வந்து சந்தித்து விட்டுச் சென்றிருக்கிறார். இந்த முறைஅவர் சந்தித்து விட்டுச் சென்றவுடனையே “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று தி.மு.க. தலைமைக் கழகத்திலிருந்து தெளிவான பத்திரிக்கைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குழப்பவாதிகள் அப்போதாவது குறிப்பறிந்திருக்க வேண்டும். ஆனாலும் “மரியாதை நிமித்தமான சந்திப்பிற்கு” காது மூக்கு வைத்து, பூச்சூடி பொட்டு வைத்து வெளியில் விட்டால்தி.மு.க.விற்கு விழும் சிறுபான்மையின வாக்குகளை இந்த நான்கு இடைத்தேர்தல்களில் தடுத்து விடலாம்- சிதறடித்து விடலாம் என்றும், மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கின்ற நிலையில் திரு ராகுல் காந்தி அவர்களை பிரதமராக முன்னிறுத்திய தி.மு.க.வின் பிரச்சாரத்தை முனை மழுங்கச் செய்து விடலாம் என்றும் “தப்புக் கணக்கு”ப்போட்டு திருமதி தமிழிசை இந்த பேட்டியை திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு கொடுத்திருக்கிறார். குறிப்பாக அ.தி.மு.க அமைச்சர் திரு ஜெயக்குமார் சொன்னதை திருமதி தமிழிசைசவுந்திரராஜன் வழி மொழிந்திருக்கிறார் என்றால் ஊழல் அ.தி.மு.கவை எப்படியாவது இந்த நான்கு இடைத் தேர்தலிலாவது தோல்வியடைய விட்டுவிடக் கூடாது என்று “போகாதஊருக்கு பொய்யான வழி தேடியிருக்கிறார்”! “உனக்கு நான்”, “எனக்கு நீ” என்று ஊழல் அ.தி.மு.கவும், மதவாத பா.ஜ.க.வும் கச்சை கட்டிக் கொண்டு “தி.மு.க தலைமையிலான”கொள்கைக் கூட்டணிக் குளத்தில் கல் எறியும் இந்த முயற்சி படு தோல்வியடையும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக கோவையிலிருந்து தேனிக்கு வந்த வாக்குபதிவு எந்திரங்கள்; திமுக மனு

தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது. தேனி...

திமுக-வுடன் கைகோர்க்க நாங்க ரெடி; சொன்னது யார் தெரியுமா?

அதிமுக ஆட்சியை கவிழ்க்க திமுக-வுடன் இணையவும் தயார்” என்று தெரிவித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தங்க தமிழ்ச்செல்வன்.  இது குறித்து அவர் மேலும் விரிவாக...

‘தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் 90% தமிழர்களுக்கே’- சீறும் மு.க.ஸ்டாலின்

'பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க தமிழ்நாட்டிற்கு இழைத்துள்ள இந்த துரோகத்தை அகற்ற திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி பூண்டுள்ளது' "மே-23 ஆம்...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe

தொழில்நுட்பம்

இலக்கியம்