Monday, May 20, 2019
Home Tags Bjp

Tag: bjp

பாஜகவுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன் என்பதை நிரூபித்தால் அரசியலில் இருந்து...

“மோடியுடனும் ஸ்டாலின் பேசி வருகிறார்.  பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்துதான் எங்களுடன் பேசி வருகிறார்” என்று “பச்சைப் பொய்” நிறைந்த ஒரு பேட்டியை பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோல்வியின் விளிம்பிற்கு சென்று விட்ட பா.ஜ.கவிற்கு இதுபோன்றுகுழப்பங்களை விதைப்பது கைதேர்ந்த விளையாட்டு. ஆனால் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த திருமதி தமிழிசை சவுந்திரராஜன் இப்படியொரு “பொய்” பேட்டியைஅளிப்பதற்காக தன்னை இந்த அளவிற்கு தரம் தாழ்த்திக் கொண்டு விட்டாரே என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன். காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தியை முதன்முதலில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது திராவிட முன்னேற்றக் கழகம் தான். அதே நேரத்தில் ஐந்தாண்டு காலத்தில்மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தை அளித்த பிரதமர் திரு நரேந்திர மோடியை “பாசிஸ்ட்” “சேடிஸ்ட்” “சர்வாதிகாரி” என்று முதன்முதலில்  விமர்சித்தது மட்டுமின்றி, “மீண்டும்இந்தியாவின் பிரதமராக திரு நரேந்திர மோடி வரவே கூடாது” என்று சென்னையில் மட்டுமல்ல - கல்கத்தாவிலும், டெல்லிலும் மாறி மாறி பிரச்சாரம் செய்தவனும் அடியேன்தான். தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியிலும் அதே பிரச்சாரத்தை செய்திருக்கிறேன். நடைபெறவிருக்கின்ற நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் மே 23 ஆம்தேதியுடன் பிரதமர் திரு மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்பதை உறுதியாகவும், இறுதியாகவும் பேசி வருகிறேன். இதைப் பொறுக்க முடியாத பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் கடைந்தெடுத்த அரசியல் கயமைத்தனம் மூலம் அ.தி.மு.கவை மிரட்டி கூட்டணி வைத்தது போல், இட்டுக்கட்டிய பேட்டிகளைகற்பனைக் குதிரைகள் போல் தட்டி விட்டு தி.மு.க.வை வம்புக்கு இழுக்க முயற்சிக்கிறார்கள். தி.மு.க.வின் வெற்றியும், அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றியும் அந்த அளவிற்குபா.ஜ.க.வை மிரட்டி விட்டது. பிரதமர் திரு நரேந்திர மோடி உள்ளிட்ட மேலிடப் பா.ஜ.க. தலைவர்களின் சுயநலனுக்கு திருமதி தமிழிசை சவுந்திரராஜன் கடைசிக்கட்டமாகபகடைக்காயாக ஆக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா முதல்வர் திரு சந்திரசேகர் ராவ் அவர்கள் இப்போது முதன்முதலாக என்னை வந்து பார்க்கவில்லை. இதற்கு முன்பும் வந்து சந்தித்து விட்டுச் சென்றிருக்கிறார். இந்த முறைஅவர் சந்தித்து விட்டுச் சென்றவுடனையே “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று தி.மு.க. தலைமைக் கழகத்திலிருந்து தெளிவான பத்திரிக்கைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குழப்பவாதிகள் அப்போதாவது குறிப்பறிந்திருக்க வேண்டும். ஆனாலும் “மரியாதை நிமித்தமான சந்திப்பிற்கு” காது மூக்கு வைத்து, பூச்சூடி பொட்டு வைத்து வெளியில் விட்டால்தி.மு.க.விற்கு விழும் சிறுபான்மையின வாக்குகளை இந்த நான்கு இடைத்தேர்தல்களில் தடுத்து விடலாம்- சிதறடித்து விடலாம் என்றும், மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கின்ற நிலையில் திரு ராகுல் காந்தி அவர்களை பிரதமராக முன்னிறுத்திய தி.மு.க.வின் பிரச்சாரத்தை முனை மழுங்கச் செய்து விடலாம் என்றும் “தப்புக் கணக்கு”ப்போட்டு திருமதி தமிழிசை இந்த பேட்டியை திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு கொடுத்திருக்கிறார். குறிப்பாக அ.தி.மு.க அமைச்சர் திரு ஜெயக்குமார் சொன்னதை திருமதி தமிழிசைசவுந்திரராஜன் வழி மொழிந்திருக்கிறார் என்றால் ஊழல் அ.தி.மு.கவை எப்படியாவது இந்த நான்கு இடைத் தேர்தலிலாவது தோல்வியடைய விட்டுவிடக் கூடாது என்று “போகாதஊருக்கு பொய்யான வழி தேடியிருக்கிறார்”! “உனக்கு நான்”, “எனக்கு நீ” என்று ஊழல் அ.தி.மு.கவும், மதவாத பா.ஜ.க.வும் கச்சை கட்டிக் கொண்டு “தி.மு.க தலைமையிலான”கொள்கைக் கூட்டணிக் குளத்தில் கல் எறியும் இந்த முயற்சி படு தோல்வியடையும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜம்மூ காஷ்மீரில் பாஜக-வுக்கு ஆதரவாக செயல்பட செய்தியாளர்களுக்கு லஞ்சம் ; வெளியானது சிசிடிவி...

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் லேஹ் பகுதியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் சிலர், ‘தேர்தலில் சாதகமான செய்திகள் வெளியிட செய்தியாளர்களுக்கு பாஜக லஞ்சம் கொடுத்துள்ளது' என்ற  குற்றச்சாட்டை கூறியுள்ளனர் . இந்நிலையில் கடந்த...

எங்கள் எம்எல் ஏக்களை வாங்குவது எளிதல்ல; குதிரை பேரம் நடத்துவது ஜனநாயகமா? – கெஜ்ரிவால்...

எதிர்க்கட்சி எம்.எல் ஏக்களை குதிரை பேரத்தின் மூலம் இழுப்பதுதான் ஜனநாயகமா? எங்கள் எம்எல் ஏக்களை வாங்குவது எளிதல்ல என்று பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியிருந்தார். அவ்வாறு...

மோடி, அமித்ஷாவின் சர்ச்சை பேச்சுகள்; கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்; உச்சநீதிமன்றத்தை நாடிய காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் மீது தேர்தல் விதிமீறல் புகார்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்திருந்தது காங்கிரஸ். அந்த புகார் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை...

முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் பாஜக அதிகத் தொகுதிகளில் போட்டி

மக்களவைத் தேர்தலில் பாஜக 437 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இது அக்கட்சியின் வரலாற்றில் முதல்முறையாகும். கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத்...

Pragya Singh Thakur and the dangers of India’s emerging majoritarian democracy

Modi’s choice of a terror accused as parliamentary candidate signals intent to fundamentally change the republic

தேர்தலை முன்னிட்டு நமோ ஆப் தயாரித்த கம்பெனியின்...

மக்களவைத் தேர்தல் தொடர்பான தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சியோடு தொடர்புடைய 687 கணக்குகளை முடக்கி பேஸ்புக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று செய்தி வெளியிட்ட ஏஎன்ஐ...

இஸ்ரோவுக்கு நிதி வழங்காமல் இந்திரா காந்தி குடும்பம் ஆடம்பர வாழ்க்கை நடத்தியதா?

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தேவைகளை புறக்கணித்துவிட்டு இந்திரா காந்தியின் குடும்பம் ஆடம்பரமான வாழ்க்கையை நடத்தி வந்தது என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப்...

மக்களவைத் தேர்தல் : சீட் மறுக்கப்பட்டதால் கண்ணீர் விட்டு அழுத பாஜக எம்.பி

உத்தரபிரதேசத்தில் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால் பாஜக எம்.பி. பிரியங்கா ராவத் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்பட்டியலை வெளியிட்டு வருகிறது.அது மட்டுமல்லாமல், உத்தரபிரதேச மாநிலத்தில்தற்போது...

ஃபேஸ்புக்கில் விளம்பரத்திற்காக அதிகம் செலவு செய்த கட்சி?

மக்களவைத் தேர்தல் பிரசாரங்களுக்காக சமூக வலைதளமான ஃபேஸ்புக் அரசியல் கட்சிகள் இதுவரை சுமார் ரூ.8 கோடி செலவிட்டு விளம்பரம் செய்துள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதிக பட்சமாக பாஜக அதிக அளவில்...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,800FansLike
609FollowersFollow
2,710FollowersFollow
3,941SubscribersSubscribe

தொழில்நுட்பம்

இலக்கியம்