Save Soil பயணம்; ஓமனில் ஜக்கி வாசுதேவுக்கு எதிர்ப்பு

0
209

முஸ்லிம்களுக்கு எதிரானவர் ஜக்கி வாசுதேவ் என்று குற்றம் சாட்டி ஓமன் நாட்டிற்குச் செல்வதற்கு ஓமன் மக்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஜக்கி வாசுதேவ் மார்ச் மாதம் முதல் பல்வேறு நாடுகளுக்கு 100 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். சவுதி அரேபியா, பஹ்ரைன் ஆகிய நாடுகள் உட்பட பல உலக நாடுகளுக்கு “மண் பாதுகாப்பு” என்ற சுற்றுச்சூழல் முன்னெடுப்பில், மண் வளம் மற்றும் மண்ணின் ஆரோக்கியத்திற்கு ஆதரவைச் சேகரிப்பதன் பகுதியாக இந்தப் பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சேவ் சாயில் (Save Soil) இணையதளத்தின்படி, மஸ்கட்டில் ஓமன் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் நிகழ்ச்சியில் மே 25ஆம் தேதி, ஜக்கி வாசுதேவ் பங்கெடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

அதற்கு எதிர்வினையாக, “#Sadhguru_not_welcome” என்ற ஹேஷ்டேக் ஓமன் நாட்டில் 19ஆம் தேதி டிரெண்டானது. 14,200 ட்வீட்டுகள் இந்த ஹேஷ்டேக்குடன் பதிவிடப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here