‘பிஎஸ்எல்வி – சி 38′ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து, வெள்ளிக்கிழமை காலை 9.29 மணிக்கு பி.எஸ்.எல்.வி., – சி 38 ராக்கெட் மூலம், ‘கார்ட்டோசாட் – 2′ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள், புவியின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்ந்து ஆஸ்திரியா, பெல்ஜியம், சிலி, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளின் 29 செயற்கைக்கோள்களும், கன்னியாகுமரியைச் சேர்ந்த நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தின் மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நானோ செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த 31 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

இதையும் படியுங்கள் : விஜய் படத்துக்குத் திரைக்கதை அமைத்துள்ள பாகுபலி கதாசிரியர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்