வைர வியாபாரியான நீரவ் மோடி மற்றும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் மீது சிபிஐ அதிகாரிகள் மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளையில் 11,421 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நீரவ் மோடியின் மனைவி அமி மோடி, சகோதரர் நிஷால் மோடி, அவரது உறவினர் மெஹூல் சோக்ஸி (கீதாஞ்சலி ஜெம்ஸ்) ஆகியோர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

நீரவ் மோடிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வகை கார்கள், இரண்டு மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல் 350 வகை கார்கள், ஒரு போர்ஷ் பனமேரா கார், மூன்று ஹோண்டா வகை கார்கள், ஒரு டொயோட்டா ஃபோர்சுனர் கார் மற்றும் ஒரு டொயோட்டா இன்னோவா கார் உள்ளிட்ட விலை உயர்ந்த ஒன்பது சொகுசு கார்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், நீரவ் மோடி மற்றும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் மேலும் 1,251 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சிபிஐயிடம் புகார் அளித்துள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்