#OvercomeOckhi: ஒக்கி குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் நிவாரணம்

காணாமல் போன/உயிரிழந்த 177 மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு

0
445

ஒக்கி புயல் பேரிடரில் சிக்கி காணாமல் போன 177 மீனவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.35.40 கோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதன் கிழமை வழங்கினார்; ஒக்கி புயல் பேரிடர் ஏற்பட்டபோது மத்திய, மாநில அரசுகளின் மெத்தன நடவடிக்கையால் 177 மீனவர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியாமல் போனது. மக்களின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, மத்திய அரசின் நிபுணர் குழுவினர் ஒக்கி பேரிடர் பாதிப்பை மதிப்பிட்டார்கள். மீனவ மக்களின் தொடர் போராட்டங்களுக்குப் பின்னர், கேரள அரசைப் போல காணாமல் போன/உயிரிழந்த மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

ஒக்கி பேரிடருக்குப் பின் 100 நாட்களாகியும் இந்த நிவாரணம் வழங்கப்படவில்லை என்கிற விமர்சனம் மீனவர் அமைப்புகளால் முன்வைக்கப்பட்டது; வியாழக்கிழமையன்று (மார்ச் 15) மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டமன்றம் கூடுகிறது; இந்த நிலையில் புதன் கிழமையன்று தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நிவாரணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினார்.

ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here