வாட்ஸ் அப் உள்ளிட்ட ஓடிடி செயலிகளை கண்காணிக்க தேவையில்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI அறிவித்துள்ளது. வாட்ஸ் அப், பேஸ்புக், மெசன்சர் உள்ளிட்ட ஓடிடி செயலிகளின்  செயல்பாடுகளை நெறிப்படுத்த வேண்டும் என இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் வடமாநிலங்களில் மாட்டுக்கறி விவகாரத்தில் ஒரு கும்பல் தாக்கியதில் சிலர் கொல்லப்பட்டனர்.  மேலும், பல்வேறு வசந்திகள் வாட்ஸ் அப்பில் பரவுவதால் அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, வாட்ஸ் அப் தகவல்களை இடைமறித்து அறியும் வசதியை வழங்குமாறு இந்நிறுவனத்திடம் மத்திய அரசு கேட்டிருந்தது. ஏனினும், அதனை ஏற்க மறுத்த வாட்ஸ் அப் நிறுவனம், ஒட்டு மொத்தமாக செய்திகளை அனுப்புவதற்கு  சில கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்நிலையில், வாட்ஸ் அப், பேஸ்புக் மெசன்சர், ஆப்பிள் பேஸ் டைம், கூகுள் சர்ச், ஸ்கைப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை இடைமறித்து கண்காணிக்க தேவையில்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI  தெரிவித்துள்ளது. தகவல் தொடர்பு செயலிகளை இடைமறித்து கண்காணிப்பதை கட்டாயமாக்கினால், பாதுகாப்பு கட்டமைப்பை பலவீனப்படுத்தலாம் அல்லது சட்டவிரோத செயல்களை அதிகரிக்க செய்யலாம் என்று TRAI  கருத்து  தெரிவித்துள்ளது. டிராயின் இந்த முடிவுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here