ஆஸ்கர் விருது விழாவில் மறைந்த திரைப்பட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. விழாவின்போது, மறைந்த திரைப்பட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது இந்திய நடிகை ஸ்ரீதேவி, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகரான ரோஜர் மூர், பிரபல நகைச்சுவை நடிகர் ஜெர்ரி லூயிஸ் உள்ளிட்ட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ரோஜர் மூர்:
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரங்களில் நடித்த பிரபல நடிகரான ரோஜர் மூர், கடந்த 2017ஆம் ஆண்டு மே, மாதம் சுவிட்சர்லாந்தில் காலமானார். கடந்த 1973ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை அவர் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றார். லிவ் அண்ட் லெட் டை, தி ஸ்பை ஹூ லவ்டு மீ, மூன்ரேக்கர், ஆக்டோபஸி, ஏ வியூ டூ கில் போன்ற படங்கள் புகழ்பெற்றவை.

ஜெர்ரி லூயிஸ் : அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகரான ஜெர்ரி லூயிஸ், கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

jerry

ஸ்ரீதேவி: இந்திய நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் காலமானார். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here