மொபைல் ரோமிங் கட்டணங்கள் குறைகிறது

0
412

மொபைல் ரோமிங் கட்டணங்கள் மற்றும் குறுஞ்செய்தி கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

மொபைல் ரோமிங் கட்டணங்கள் மே 01 முதல் குறைய உள்ளது. புதிய கட்டணமாக உள்ளூர் அவுட்கோயிங் ரோமிங் கால்களுக்கு கட்டணமாக நிமிடத்துக்கு 80 பைசாவாகவும், எஸ்டிடி கால்களுக்கான கட்டணம் அதிகபட்சமாக நிமிடத்துக்கு 1.15 காசுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான டிராய் இந்த கட்டணக் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மே 01ம் தேதியிலிருந்து இந்த கட்டணப்படிதான் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற வேண்டும் என கூறியுள்ளது. தேசிய அளவிலான ரோமிங் மற்றும் குறுஞ்செய்தி சேவைக்கும் கட்டணங்கள் மாற்றப்பட்டுள்ளன.

இதன்படி உள்ளூர் அவுட்கோயிங் கால்களுக்கு அதிகபட்ச கட்டணமாக நிமிடத்துக்கு 80 பைசாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நிமிடத்துக்கு 1 ரூபாய் கட்டணமாக இருந்தது. எஸ்டிடி கட்டணம் நிமிடத்துக்கு 1.50 காசுகளாக இருந்தது தற்போது 1.15 ஆக குறைக்கபட்டுள்ளது.

ரோமிங் இன் கமிங் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 45 காசுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 75 காசுகள் என நிர்ணயிக்கபட்டிருந்தது. அது போல தேசிய ரோமிங்கில் அவுட் கோயிங் லோக்கல் குறுஞ்செய்திகளுகான கட்டணம் ரூ.1 ஆக இருந்தது தற்போது 25 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

அவுட் கோயின் நீண்ட தூர குறுஞ்செய்தி சேவைக்கான கட்டணம் ரூ.1.50-லிருந்து 38 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண மாறுதலை தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் மாற்றியமைக்க வேண்டும் என டிராய் கேட்டுள்ளது. கடைசியாக 2013ம் ஆண்டு டிராய் கட்டணங்களை மாற்றியமைத்தது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்