News 7 திடீரென்று ஜெயலலிதாவை எதிர்ப்பது ஏன்?

3
12

(மே 8,2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

”வைகுண்டராஜன் என்ன இப்படி முடிவெடுத்து விட்டார்?” என்று அவருடைய திசையன்விளை நண்பர் தொலைபேசி செய்தார்; “பைசா வச்சிருக்கவங்கதான் நாட்டை ஆளணும்னா, எப்பவோ அம்பானி நமக்குப் பிரதமராகியிருப்பார்” என்றேன். நண்பர் மடக்கினார்: “அம்பானி சொல்றவங்கவதானே பிரதமர்” என்றார். திசையன்விளை அம்பானி 2016இல் தமிழ்நாட்டின் ஆட்சியை முடிவு செய்ய ஆசைப்படுகிறார். சின்னதாய் முன்கதைச் சுருக்கம் இங்கே சொல்ல வேண்டும்:

2011ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது “என்னை முதலமைச்சராக்குங்கள்” என்று மதுரையில் ஜெயலலிதா மக்களுக்கு வேண்டுகோள் வைக்கும்போது “இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்களைத் தண்டிப்பேன்” என்றார். 2015ஆம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதா இரண்டு வருடங்கள் ஆட்சியை நிறைவு செய்தபோது “என்ன இன்னும் வைகுண்டராஜனைத் தண்டிக்கவில்லையே” என்கிற கேள்வியை நான் உள்பட பல ஊடகங்களும் முன்வைத்தோம். நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியான ககன்தீப் சிங் பேடியிடம் தாது மணல் குவாரிகளை ஆய்வு செய்யும் பணியை ஒப்படைத்தார் ஜெயலலிதா.

ககன்தீப் சிங் பேடி பரிந்துரை செய்தபடியே வைகுண்டராஜனின் தாது மணல் வியாபாரம் முடக்கப்பட்டது; இல்மனைட், கார்னெட், டைட்டானியம் தாது நிறைந்த தாது மணல் வியாபாரத்தை ஆந்திராவுக்கும் ஒடிசாவுக்கும் சென்று தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது; தாது மணல் வியாபாரத்தைக் காக்கும் அவருடைய Project Shieldதான் News 7 டிவி சேனலாக உருவெடுத்தது. ஜெயலலிதா ஆட்சியை அகற்ற வைகுண்டராஜன் முடிவெடுத்த செய்தியை தினமலர் வெளியிட்டது. அதனை இங்கே படியுங்கள்:
IMG_0889

IMG_0890
தினமலர், ஏப்ரல் 24, 2016

ககன்தீப் சிங் பேடிக்கு நான் கொடுத்த வீடியோ ஆதாரம்

திருச்செந்தூர் தொகுதியில் ஆர்.சரத் குமாரை ஆதரிப்பதா அல்லது அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரிப்பதா என்று வைகுண்டராஜன் இன்னும் முடிவு செய்யாததால் இந்த வெற்றிடமா?

IMG_0881

தினமலர் மே 4, 2016

இதையும் படியுங்கள்: பெண்கள் பேசவில்லையாம்; காதுல பூ சுத்தும் தினமலர் சர்வே

3 கருத்துகள்

  1. த்தூ… இதெல்லாம் ஒரு கருத்துக்கணிப்பா? கவலைப்படாதீங்க. நீங்க எடுத்த அறிவியல்பூர்வமான கருத்துக்கணிப்பின்படி அதிமுக 218 தொகுதிகளில் வெற்றி பெறும்.

ஒரு பதிலை விடவும்