#NEET2018 : நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டியவை

0
201

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எந்தெந்த உடைகள் அணிந்திருக்க வேண்டும், எவற்றையெல்லாம் அணியக் கூடாது, தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்.

முக்கிய அட்டவணை

அட்டை சோதனை: 7:30 am to 9:45 am
தேர்வு கையேடு விநியோகம்: 9:45 am
தேர்வு மையத்தில் கடைசி இடுகை: காலை 9: 30 மணி
தேர்வு தொடங்கும் நேரம் : 10 am
தேர்வு முடியும் நேரம் : 1 மணி
முடிவு அறிவிப்பு: ஜூன் 5 ஆம் தேதிக்குள்

மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் -

நீட்தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மே,6,2018) காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை நடைபெறும். தேர்வெழுதும் மாணவர்கள் ஏ, பி என இரு பிரிவினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஏ பிரிவில் உள்ளவர்கள் காலை ஏழரை மணியில் இருந்து
எட்டரை மணிக்குள் தேர்வு மையத்துக்குச் சென்று தாங்கள் வந்திருப்பதைத் தெரிவிக்க வேண்டும் பி பிரிவில் உள்ளவர்கள் காலை எட்டரை மணியில் இருந்து ஒன்பதரை மணிக்குள் தேர்வு மையத்துக்குச் சென்று தாங்கள் வந்திருப்பதைத் தெரிவிக்க வேண்டும். ஒன்பதரை மணிக்குப் பின் வருபவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மாணவர்கள் எளிமையான உடைகளை அணிந்திருக்க வேண்டும்.அரைக்கைச் சட்டை அணியலாம், முழுக்கைச் சட்டை அணியக் கூடாது. பைகள், பெரிய பட்டன்கள் , பூத்தையல் வேலைகள் இல்லாத எளிமையான உடை அணிய வேண்டும். குர்தா பைஜாமா அணியக் கூடாது, கால் சட்டை அணியலாம். சூ அணியக் கூடாது ஸ்லிப்பர், சாண்டல் வகைச் செருப்புகளை அணியலாம். பெல்ட், தொப்பி அணியக் கூடாது. சீக்கியர்கள் தலைப்பாகை அணிந்திருக்கலாம்.

மாணவிகள் அணியும் உடையில் பூத்தையல், பூக்கள், பெரிய பட்டன்கள் இருக்கக் கூடாது. அரைக்கைச் சட்டை அணியலாம், முழுக்கைச் சட்டை அணியக் கூடாது. சல்வார் கமீஸ், கால்சட்டை அணியலாம். சூ அணியக் கூடாது, சிலிப்பர், சாண்டல் வகைச் செருப்புகளை அணியலாம். மோதிரம், சங்கிலி, கம்மல், மூக்குத்தி, வளையல் உள்ளிட்ட எந்த வகையான நகைகளும் அணிந்திருக்கக் கூடாது. தலையில் பூ வைத்திருக்க கூடாது. முஸ்லிம் பெண்கள் மத வழக்கப்படி புர்க்கா அணிந்திருக்கலாம்.
தேர்வு எழுதுவோர் கொண்டுவரும் பொருட்களைப் பாதுகாக்கத் தேர்வு மையத்தில் எந்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்காது .

அச்சிட்ட அல்லது எழுதிய தாள், துண்டுத்தாள், ஜியோமெட்ரி பாக்ஸ், கால்குலேட்டர், பிளாஸ்டிக் பை, ஸ்கேல், எழுதும் அட்டை, பென்டிரைவ்கள், ரப்பர் , லாக் அட்டவணை, செல்பேசி, புளூடூத், காதுகருவி, மைக், பேஜர் ஆகியவற்றைத் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்லக் கூடாது. கைப்பைகள், ஏடிஎம், கிரெடிட் அட்டைகள், பிளாஸ்டிக் அடையாள அட்டை, ரிமோட் கீ ஆகியவற்றையும் கொண்டுசெல்லக் கூடாது.

கைக்கடிகாரம், கேமரா, காப்பு முதலிய உலோகப் பொருட்கள் உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றைக் கொண்டு செல்லக் கூடாது.தடைசெய்யப்பட்ட பொருட்களைத் தேர்வு மையத்துக்குள் கொண்டுசெல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும். தேர்வுக்கான அனுமதிச் சீட்டையும் ஒரு பாஸ்போர்ட் அளவு வண்ணப்படத்தையும் தேர்வு மையத்துக்கு எடுத்துச் செல்லலாம்.

இதையும் படியுங்கள்: தலித் மக்கள் மீதான வன்முறையினைக் கண்டிக்காமல் மோடி வேடிக்கைப் பார்த்தார்” – ராகுல்காந்தி

இதையும் படியுங்கள்: “பாஸ்வேர்டை மாற்றுங்கள்” – பயனர்களுக்கு டிவிட்டர் எச்சரிக்கை

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்