நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (National Eligibility and Entrance Test – NEET) இந்தாண்டு நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தியது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாரணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடியானது.

இந்நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்களிக்கும் வகையிலான அவசர சட்ட முன்வரைவை, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு சமர்ப்பித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்துக்கு விலக்களிப்பது குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம், மத்திய அரசு கருத்து கேட்டது. அவரும் நீட் தேர்வில் விலக்கு அளிக்கலாம் என அவர் கருத்து கூறியதையடுத்து, மத்திய சட்ட அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் சுகாதாரத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை ஆகிய அமைச்சகங்களும் ஒப்புதல் அளித்துள்ளன,

இதையும் படியுங்கள்: பிக்பாஸ் வெறியரா நீங்கள் ? அவசியம் இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்