#NanbarAjith : அஜித்தைக் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

0
226

இன்று மே 1. நடிகர் அஜித் தனது 49 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் உட்பட் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் #NanbarAjith என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அஜித்துக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதற்கு அஜித் ரசிகர்கள் பலர் நன்றி தெரிவித்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் என்றும் மோதலில் ஈடுபடும் இருவரது ரசிகர்களும் இன்று ஒருவரை ஒருவர் கட்டி அணைப்பதுபோல் டிவிட்டரில் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருவதற்கு பலரும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாஸ்டர்  இசை வெளியீட்டு விழாவுக்கு கோட் சூட்டில் வந்த விஜய், நண்பர் அஜித்தைப்போல் வரலாம்னு தான் கோட் சூட்ல வந்தேன் என தெரிவித்திருந்தார். அவர் சொன்ன அந்த நண்பர் அஜித் இன்று விஜய் ரசிகர்களால்டிரெண்ட் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here