லீனா மணிமேகலை விவகாரத்தில் சுசிகணேசனுக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. சுசி கணேசன் மிரட்டியதால் இனி தீவிரமாக லீனாவை ஆதரிப்பேன் என சித்தார்த் தெரிவித்துள்ளார்.

மீ டூ விவகாரத்தில் லீனா மணிமேகலை இயக்குநர் சுசிகணேசன் குறித்துப் பதிவு செய்ய, இதனால் பொங்கி எழுந்த சுசிகணேசன் அதற்கான மறுப்பை தெரிவித்து வழக்குப் பதிவு செய்துள்ளார். இனி தன் வாழ்நாளில் பெண் இயக்குநர்களை பணிக்கு அமர்த்தமாட்டேன் என்று சுசி கணேசன் தெரிவித்துள்ளார் .

ஆரம்பத்திலிருந்தே நடிகர் சித்தார்த் மீ டூவை ஆதரித்து பதிவிட்டு வருகிறார். லீனா மணிமேகலைக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார் சித்தார்த். இந்நிலையில் லீனா மணிமேகலையை ஆதரித்ததால் தனது தந்தையை சுசி கணேசன் மிரட்டியதாக சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

”சுசி கணேசன் எனது தந்தையிடம் வயதானவர் என்றும் பாராமல் தொலைபேசியில் மிரட்டியிருக்கிறார். லீனாவுக்கு நான் ஆதரவு தெரிவித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார்.

அதனால் இப்போது அனைவருக்கும் ஒரு விஷயத்தைத் தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இனி லீனா மணிமேகலைக்காக முன்பை விட அதிகமாக துணை நிற்பேன். நல்லதொரு எதிர்ப்பை தெரிவித்திருக்கிறீர்கள். தைரியமாக இருங்கள் சகோதரி” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here