மீ2 குறித்து பேசுவதற்கு சினிமா சார்ந்த பெண்களுக்கு ஏராளம் உள்ளது. ஆண்களின் பாலியல் அத்துமீறலை எதிர்கொள்ளாத ஒருவரும் சினிமாத்துறையில் இல்லை எனும் அளவுக்கு அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மீ2 புகார் கூறிய பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறார் இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன். ட்விட்டரில் ஆதரவு தெரிவிப்பதுடன் நின்றுவிடாமல் அவர்கள் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்களுடன் கலந்து கொண்டார். இந்நிலையில் பிஆர்ஓ நிகில் முருகன் தன்னிடம் தவறான கண்ணோட்டத்துடன் நடந்து கொண்டதாகவும், இதுவரை அது குறித்து வெளியில் சொல்லவில்லை, இனியும் சொல்லாமலிருப்பது மீ2 இயக்கத்துக்கு நேர்மையாக இருப்பது ஆகாது என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நிகில் முருகன் ஒரு ட்வீட்டை வெளியிட்டார்.

அதில், லட்சுமி ராமகிருஷ்ணனை சந்தித்து, அவருக்கு அசௌகரியம் ஏற்படும்வகையில் தெரியாமல் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும், பெண்களை அவர்களின் திறமையை வைத்து மதிக்க வேண்டும் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டதை கவனத்தில் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் லட்சுமி ராமகிருஷ்ணனும் இந்த விஷயத்தில் சமாதானமடைந்துள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here