“மீ டூ” (#MeToo) என்ற பெயரில் டிவிட்டர் இணைய தளத்தில் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அவ்வகையில், மீ டூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பரும் ஆளாகியிருக்கிறார். பிரபல பத்திரிக்கையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் என பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர்.

அவர் மீதான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வந்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றிருந்த அக்பர் சமீபத்தில் டெல்லி திரும்பினார். தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, பொய்யாக ஜோடிக்கப்பட்டவை என குறிப்பிடிருந்தார்.

இந்நிலையில், இன்று மாலை தனது அமைச்சர் பதவியை எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்தார்.

தனிப்பட்ட முறையில் என்மீது சுமத்தப்பட்டுள்ள பொய் குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ள விரும்புவதால் எனது பதவியில் இருந்து விலகுகிறேன் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here