வெளிநாட்டில் தொடங்கிய மீ2 இயக்கம் தற்போது தமிழ் சினிமாவில் மையம் கொண்டிருக்கிறது. வெண்மேகமாக இருந்த பலரது இமேஜை மீ2 கருப்பாக மாற்றியிருக்கிறது. பொய் எது மெய் எது என்று கண்டுபிடிக்க முடியாதபடி மீ2 புகார்கள் குவிந்தபடி உள்ளன. இவற்றிலிருந்து வெளிப்படும் முக்கியமான உண்மை, படப்பிடிப்புதளங்களிலும் அதற்கு வெளியேயும் பெண்கள் பாலியல் சரண்டலுக்கு உள்ளாகிறார்கள் என்பதே.

44532990_567044450418284_3420932315868561408_n

இதனை கட்டுப்படுத்த தென்னிந்திய நடிகர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது. அதற்கு பதிலளிக்கும்விதமாக தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

கலைஞர்கள் படப்பிடிப்புதளங்களில் அச்சமின்றி, மன அழுத்தமின்றி சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் பணிபுரிவதை உறுதிசெய்யும்வகையில் கண்காணிப்புக்குழு அமைக்கப்படும் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் லெட்டர் பேடில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த செய்தியை, பத்திரிகைச்செய்தி என்ற தலைப்பில் கொடுத்திருக்கிறார்கள். பத்திரிகையில் இப்படியொரு செய்தி வந்திருக்கிறது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரியப்படுத்தியிருக்கிறது அவ்வளவே. அப்படியானால் குழு அமைக்கப்படுமா? ஒரே நேரத்தில் நான்கு டஜன் படப்பிடிப்புகள் நடத்தப்படுகின்றன. அத்தனை இடங்களையும் கண்காணிப்பது சாத்தியமா?

சங்க நிர்வாகிகள் பொறுப்பான பதில்தர கடமைப்பட்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here