‘Mango Mousse’ – வீட்டிலேயே எளிதாக தயாரிக்கும் முறை

0
348

வழக்கமாக கோடையில் மாம்பழத்திற்கு பஞ்சமிருக்காது. எனவே மாவுஸ் (Mousse) செய்வது உங்களுக்கு எளிதானது. மாம்பழத்தைவிட மாவுஸ் மிகவும் அருமையாக இருக்கும். இதற்கு சர்க்கரை, முட்டை இருந்தால் போதுமானது. ஆனால் ஒருவேளை நீங்கள் சைவ உணவு பிரியராக இருந்தால் முட்டையில்லாத மாவுஸ் செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம் . 

தேவையான பொருள்கள் – 

 மாம்பழம் 

ஹெவி கிரீம்/கோக்கனட் கிரீம்

ஜெலட்டின்(gelatine)

இலவங்கப்பட்டை தூள்

சர்க்கரை

மாம்பழத்தினை நன்றாக கூழாக மாற்றிக்கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் மாம்பழம் கூழை எடுத்து  ஹெவி க்ரீம் அல்லது கோக்கனட் கிரீம் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். 

அந்தக் கலவையுடன்  தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும் . 

ஜெலட்டினை சூடான் நீரில் கரைத்து ஆறியவுடன் கலவையுடன் சேர்த்து கலக்க வேண்டும் 

இந்தக் கலவையை  ஜார்களில் வைத்து  மேலாக சில மாம்பழத் துண்டுகளால் அலங்கரித்து இலவங்கப்பட்டை தூளை சிறிது தூவி குளிர்சாதன பெட்டியில் 20-30 நிமிடங்கள் வைத்த பிறகு  எடுத்து சாப்பிடலாம் 

இந்தக் கலவையை (மாம்பழக்கூழ், கிரீம், ஜெலட்டின், சர்க்கரை சேர்ந்த கலவை) கண்ணாடி டம்பளர்களில் போட்டு அதன் மேல் கொஞ்சம் கீரிமை போட்டு மீண்டும் அதன் மேல் கலவையை போட்டு அதன் மேல் சில மாம்பழத் துண்டுகளால் அலங்கரித்து இலவங்கப்பட்டை தூளை சிறிது தூவி குளிர்சாதன பெட்டியில் 20-30 நிமிடங்கள் வைத்த பிறகு  எடுத்து சாப்பிடலாம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here