மோடி2.0 ; சம்பவம் 2 ; ‘பாகிஸ்தானுக்கு போ’ என்று கூறி முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல்

0
903

தாக்குதலுக்கு உள்ளான முஸ்லிம் இளைஞர் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. 

பீகாரில், பெகுசரய் மாவட்டத்தில்  முகமது காசிம் என்பவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் முஸ்லிம் என்பதால் சுடப்பட்டிருக்கிறார். 

செரியா பரியார்புர் காவல்நிலையத்தில் தாக்குதல் குறித்து பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்று போலீஸார் கூறியுள்ளனர். 

முகமது காசிம் – ஐ ராஜிவ் யாதவ் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார் . சம்பவம் பற்றி கூறும் முகமது காசிம் ‘நான் சோப்பு விற்பனை செய்து வருகிறேன் . கும்பி கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது என்னை  ராஜிவ் யாதவ் வழியில் தடுத்தி  நிறுத்தி என் பெயரைக்  கேட்டார்  . முகமது காசிம் என்று  பெயரை கூறியவுடன் நீ பாகிஸ்தானுக்கு போக வேண்டும் இங்கிருக்கக் கூடாது என்று கூறிக்கொண்டே துப்பாக்கியால்  சுட்டுவிட்டார். 

என்னை துப்பாக்கியால் சுட்டபோது யாரும் எனக்கு உதவி செய்ய வரவில்லை. எனது முதுகில்  சுட்டதால் எப்படியோ காவல் நிலையத்துக்கு வந்து புகார் அளித்தேன் . போலீஸார்தான் என்னை அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் என்று கூறுகிறார்.   

முகமது காசிம் புகாரை பதிவு செய்தவுடன் நாங்கள் அவரை தேடும் பணியை முடுக்கிவிட்டோம் ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார் என்று பெகுசரய் போலீஸ் எஸ்.பி கூறியுள்ளார். 

thehindu – English 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here