ஓமன் நாட்டில் இயந்திரம் இயக்குபவர்கள் பணிக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு வருட பணி அனுபவத்துடன் 22 முதல் 32 வயதிற்குட்பட்ட இயந்திரம் இயக்குபவர்கள் (Machine Operators) தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ரூ.25,000/- வரை ஊதியம், இருப்பிடம், இலவச விமான டிக்கெட் மற்றும் அந்நாட்டின் சட்டதிட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஒரிஜினல் பாஸ்போர்ட், சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் நீலநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட ஐந்து புகைப்படத்துடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (மன்னார்புரம்) 6.3.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் நடைபெறும் முதற்கட்டத்தேர்விற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு 044-22505886/22502267 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்திலும் அறிந்து கொள்ளலாம். இந்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விவகார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவர் எண்v©.RC No.B-0821/CHENNAI/CORPN/1000+/5/308/84 ஆகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்