லண்டனின், மேற்குப் பகுதியில் 27 அடுக்குகள் கொண்ட ‘கிரென்ஃபெல் டவரில்’ தீ விபத்து ஏற்பட்டது. லண்டன் மேற்குப் பகுதியான லான்காஸ்டர் எஸ்டேட் பகுதியில், 27 மாடிகள் கொண்ட ‘கிரென்ஃபெல் டவர்’ உள்ளது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் 1974ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இதில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இந்தக் கட்டடத்தில் புதன்கிழமை (இன்று) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் கட்டடம் முழுவதும் தீ பரவியது.

fire

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட வீரர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் சிக்கியதில், இதுவரை 15 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குடியிருப்புகளில் உள்ளவர்களின் நிலை குறித்து அச்சம் எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள் : எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்