உடல்நலம் குன்றிய நிலையில் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , 11வது நாளாக சிகிச்சையில் இருந்த போது காலமானார்.

03:20 PM : கலைஞரின் உடலுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி

03:15 PM : கலைஞருக்கு உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அஞ்சலி

03:10PM: கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா சென்னை வருகை

03:00 PM: கருணாநிதியின் உடலை ஏற்றிச் செல்வதற்காக அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் ராஜாஜி ஹால் பகுதிக்கு வந்துள்ளது.

02:50 PM : கலைஞருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அஞ்சலி

02:49 PM: கருணாநிதி உடலுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

02:40 PM : கலைஞருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்

12:30 PM: விஐபி.க்கள் செல்லும் வாசல் வழியாக திரளான தொண்டர்கள் நுழைய முயன்றதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு ராஜாஜி ஹாலுக்கு அஞ்சலி செலுத்த வரும் கூட்டம் அதிகரித்திருக்கிறது.

12:15 PM: கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக, அண்ணா சமாதி பகுதியில் இடத்தை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

12:09 PM: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கர்நாடக முதல்வர் குமாரசாமி சென்னை வருகை

11:57 AM: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கை மற்றும் சாலைக்கு கருணாநிதி பெயர் வைக்கப்படும் என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

11:50 AM: அண்ணா சமாதி பகுதியில், கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள பகுதியை திமுக நிர்வாகிகள் துரைமுருகன், கே.என் நேரு உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

11:15 AM : பிரதமர் நரேந்திர மோடி, ராஜாஜி ஹாலுக்கு வந்து கருணாநிதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், மத்திய பாதுகாப்பு அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர்.

அஞ்சலி செலுத்தியபிறகு மு.க.ஸ்டாலின், கனிமொழி, ராசாத்தி அம்மாள் ஆகியோருக்கு மோடி ஆறுதல் கூறினார்.

10:45 AM; மெரினாவில் அண்ணா சதுக்கத்தில் கருணாநிதி உடல் அடக்கத்திற்கு இடம் ஒதுக்க நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், சுந்தர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

10:30 AM : முத்தமிழ் அறிஞர் கலைஞர் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அஞ்சலி

10:25 AM : மெரினாவில் இடம் கோரும் வழக்கில் தற்போது நீதிபதிகள் தீர்ப்பை படித்து வருகின்றனர்

10:25 AM : கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்து சேர்ந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் அவர் ராஜாஜி ஹாலுக்கு வந்து சேரக்கூடும்.

10:25 AM: நடிகர் வடிவேலு அஞ்சலி செலுத்திவிட்டு, ‘அவரைப் பற்றி ஒரு வரியில் சொல்ல முடியாது. அண்ணா சொன்ன எதையும் தாங்கும் இதயம் கொண்டவர் அவர்! தமிழே நம்மை விட்டுப் போனதுபோல இருக்கிறது’ என்றார் வடிவேலு.

10:15 AM: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

10:10 AM: மெரினாவில் அண்ணா நினைவிடம் பகுதியில் திடீரென மத்திய துணை ராணுவப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

10:05 AM : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார்.

10:00 AM : பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

09:50 AM: முன்னாள் முதல்வர் ஜானகி அம்மையாருக்கு கருணாநிதி முதல்வராக இருந்தபோது அனுமதி மறுத்ததை அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ‘முதல்வருக்கு அனுமதிப்பதிலும், முன்னாள் முதல்வருக்கு அனுமதி கொடுப்பதிலும் வித்தியாசம் இருக்கிறது’ என நீதிபதி குறிப்பிட்டார்.

09:35 AM: மெரினாவில் இடம் ஒதுக்குவதற்கு மத்திய அரசு விதிகள் எதுவும் எதிராக இல்லை, மாநில அரசே இதில் முடிவு எடுக்கலாம் என்றும் திமுக வழக்கறிஞர் வாதிட்டார்.

09:35 AM: மெரினாவில் இடம் ஒதுக்குவதற்கு மத்திய அரசு விதிகள் எதுவும் எதிராக இல்லை, மாநில அரசே இதில் முடிவு எடுக்கலாம் என்றும் திமுக வழக்கறிஞர் வாதிட்டார்.

09:20 AM : கலைஞர் உடலுக்கு தே.மு.தி.க. இளைஞரணித் தலைவர் சுதீஷ் அஞ்சலி

09:15 AM : கலைஞரின் உடலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் அஞ்சலி

09:15 AM : திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் சங்கம் சார்பில் நாசர் உள்ளிட்டோர் அஞ்சலி

09:10 AM: மெரினாவில் இடம் ஒதுக்க கேட்ட வழக்கில் திமுக வழக்கறிஞர் வாதிட்டு வருகிறார். அவர், ‘ஒரே சித்தாந்தம் உடையவர்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்வதுதான் சரியானதாக இருக்கும். ‘கருணாநிதியே எனது ஆன்மா, வாழ்க்கை’ என அண்ணா கூறியிருக்கிறார். கிண்டியில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் சித்தாந்தம் வேறு’ என வாதிட்டார்.

08:45 AM: மெரினாவில் இடம் ஒதுக்கும் பிரச்னையில் ‘இன்றே தீர்ப்பு வழங்க வேண்டுமா?’ என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, ‘அதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்’ என அரசுத் தரப்பில் பதில் கூறினர்.

08:35 AM: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.

08:25 AM: கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர் விவேக், லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் ஆகியோர் வந்தனர்.

08:20AM: டிராபிக் ராமசாமி வழக்கு உட்பட ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான 5 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

08:20 AM: மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக தொடரப்பட்ட4 வழக்குகள் வாபஸ் ஆன நிலையில், டிராபிக் ராமசாமி வாபஸ் பெறுவதாக முதலில் கூறினார். பின்னர் ஜெயலலிதா நினைவிடம் தொடர்பான வழக்கை மட்டும் வாபஸ் பெற விரும்பவில்லை எனக் கூறினார்.

08:15 AM: மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக தொடரப்பட்ட4 வழக்குகள் வாபஸ்

08:00 : முக்கிய பிரமுகர்களுக்கு மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கருணாநிதிக்கு மெரினாவில் இடம் இல்லை என்று தமிழக அரசு பதில் மனு தாக்குதல் செய்துள்ளது .

07.55 AM: கருணாநிதிக்கு நடிகை சரோஜாதேவி அஞ்சலி

07.45 AM: கருணாநிதி உடலுக்கு குஷ்பு கண்ணீருடன் அஞ்சலி

07.42 AM: கருணாநிதிக்கு நடிகர் அஜித்தும், அவரது மனைவி ஷாலினியும் அஞ்சலி செலுத்தினர்.

07.40 AM: கருணாநிதியின் உடலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அஞ்சலி செலுத்தினார்

07:32 AM: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்
07:20 AM : நடிகர் சூர்யா, சிவகுமார் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்

07.00 AM: கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு” என்றார்.

06.40 AM: கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், வேலுமணி, காமராஜ், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டப்பேரவை தலைவர் தனபால் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

06.20 AM: நடிகர் ராதாரவி கலைஞரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். ராதாரவியின் தந்தையும், நடிகவேளுமான எம்.ஆர்.ராதா தான் கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை சூட்டியவர்

06.20 AM: ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார். மனைவி லதா, மருமகன் தனுஷ், மகள் சௌந்தர்யா ஆகியோரும் உடன் வந்திருந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என அனைவருக்கும் தனித்தனியாக ரஜினி ஆறுதல் கூறினார்.

06.10 AM: டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

06.00 AM: ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டது. தலைமைச் செயலகத்தில் அரை கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

05.25 AM: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு கொண்டுவரப்பட்டது. ‘கலைஞர் மறைந்தார்’ என இன்றைய முரசொலி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாளிதழ் கருணாநிதி உடலுக்கு பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

04.00AM: பூமியை விட்டு நீங்கள் சென்றிருக்கலாம் ஆனால் தமிழ் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு என்றும் நிலைத்திருக்கும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

02.30 AM: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா இருந்த போது கழகம் காத்திட வளர்த்த இரு தம்பிகள் கலைஞரும், எம்.ஜி.ஆரும். அவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு. எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே. எம்.ஜி.ஆர் இருந்து கருணாநிதி இறந்திருந்தால், கண்டிப்பாக அண்ணாவின் தம்பியை அவரருகில் கிடத்தியிருப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

02:00 AM: சிஐடி காலனி வீட்டில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர். நடிகர்கள் சதீஷ், கலையரசன், கிருஷ்ணா, யுவன் ஷங்கர் ராஜா, வின்சன்ட் அசோகன், ஆர்த்தி கணேஷ், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

01: 40 AM: கருணாநிதியின் உடல் சிஐடி காலனி இல்ல வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

01.35 AM: மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கக் கோரி திமுக தொடர்ந்த மனுவின் விசாரணை இன்று காலை 8 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இம்மனு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திமுக மனு மீது காலை 08.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

01.15 AM: திமுக தலைவர் கருணாநிதியின் உடல், கோபாலபுரம் இல்லத்தில் இருந்து சிஐடி காலனி இல்லத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறது.

00.55 AM: கிரிக்கெட் வீரர்கள், சேவாக், அஷ்வின், சுரேஷ் ரெய்னா, முகமது கைஃப் ஆகியோரும் கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

11.55 PM: வழக்கறிஞர் துரைசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “5 வழக்குகள் உள்ளதால், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர முடியாது என்பதை ஏற்க முடியாது. கருணாநதிக்கு மெரினாவில் இடம் வேண்டும். எனவே, நான் தொடுத்த நான்கு வழக்குகள் மற்றும் பாமகவின் பாலு தொடர்ந்த வழக்கு என மொத்தம் 5 வழக்கும் வாபஸ் பெறப்படுகிறது. நாங்கள் தொடுத்த வழக்கை காரணம் காட்டி தான், தமிழக அரசு மெரினாவில் இடமளிக்க அனுமதி மறுத்தது. நாங்கள் எங்கள் வழக்குகளை வாபஸ் பெறுகிறோம். எனவே, கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை” என வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

11.40 PM: கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்க கோரும் வழக்கின் விசாரணை தொடங்கியது

11.35 PM: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நடிகர் அஜித்குமார் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

11. 30 PM: கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

11.15 PM: கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர் வில்சன் தலைமையிலான குழு தலைமை நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை, ஐகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷ் ,மற்றும் நீதிபதி சுந்தர் அமர்வு விசாரிக்கிறது. இந்நிலையில், தலைமை நீதிபதி வீட்டின் முன்பு, திமுக வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணைக்கு தமிழக அரசு வழக்கறிஞர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டதாக கூறி, போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

11.04 PM: கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார்.

10.55 PM: நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் பங்குகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

10.55 PM: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தருவது அந்த மாபெரும் தலைவருக்கு நாம் செய்யும் மரியாதை, கடமை’ என விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10.41 PM: மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ‘ஜெயலலிதாவை போல் மக்களின் குரலாக ஒலித்தவர் கருணாநிதி. அவரது உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர வேண்டும்’ என அவர் வலியுறுத்தியுள்ளார்.

10.35 PM : சென்னை மெரினா கடற்கரையில் யாரையும் அடக்கம் செய்யக் கூடாது என பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்து இந்த வழக்கை தாமாக முன் வந்து வாபஸ் வாங்கிக் கொண்டார்.

10.25 PM : கலைஞரின் உடல் ஏந்திய ஆம்புலன்ஸ் வாகனம் கோபாலபுரம் இல்லத்தை வந்தடைந்தது.

10.20 PM : திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, நாளை (8.8.18) நடப்பதாக இருந்த டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலை கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

10.15 PM : திமுக தலைவர் கலைஞரின் மறைவையொட்டி நாடு முழுவதும் நாளை ஒருநாள் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும். மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

10.05 PM : மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்க செய்ய இடம் ஒதுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு, நடிகர் ரஜினிகாந்த், கி.வீரமணி, ராமதாஸ், திருநாவுக்கரசர், வைகோ, விஜயகாந்த், பாலகிருஷ்ணன், குலாம்நபி ஆசாத், வேண்டுகோள்

09.45 PM : திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி கர்நாடாகாவில் நாளை விடுமுறை அறிவிப்பு

09.45 PM : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்து சேர்ந்தார்.

09.30 PM : அமெரிக்காவில் சிகிச்சைக்காக சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், கருணாநிதி மறைவுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

09.20 PM: கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர் வில்சன் தலைமையிலான குழு தலைமை நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்துள்ளது. ஐகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷிடம் திமுக மனு அளித்துள்ளது. இரவு 10.30 மணிக்கு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

09.05 PM: காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு, கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறது.

08.50 PM: ‘மெரினாவில் இடம் ஒதுக்க மறுத்து நெருப்போடு விளையாடாதீர்கள்’ என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

08.45 PM: சென்னை காவேரி மருத்துவமனை வளாகத்தில் தடியடி. மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய, இடம் ஒதுக்கக் கோரி திமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர் .

08.35 PM: தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும், ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவரும், தலைசிறந்த தமிழறிஞராகவும் திகழ்ந்த டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகவும் வருத்தத்தை தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திமுக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

08.15 PM: மறைந்த கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு மறுத்திருக்கும் நிலையில், மீண்டும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வர் பழனிசாமியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்ணா நினைவிடம் அருகே கலைஞரின் உடலை அடக்கம் செய்ய தார்மீக உரிமை உள்ளது என ஸ்டாலின் தனது வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார்.

08. 10 PM: பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த கலைஞர் கருணாநிதியின் உடல் இரவு 08.30 மணி முதல் நள்ளிரவு 01:00 வரை கோபாலபுரம் இல்லத்திலும், நள்ளிரவு 1 மணி முதல் 3 மணி வரை சி.ஐ.டி. காலனி இல்ல வீட்டிலும், பின்னர் அதிகாலை 4 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலிலும் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

08:05 PM: தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், “அண்ணா சமாதியில் அடக்கம் செய்ய அனுமதி இல்லை. பல சட்ட சிக்கல் இருக்கும் காரணமாக அங்கு இடம் ஒதுக்க முடியாது. கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் நல்லடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி அளிக்கிறது” என்று அறிக்கை விடுத்துள்ளார்.

07:55 PM: செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், “அண்ணா சமாதி அருகே, கலைஞரின் உடலை அடக்கம் செய்ய தமிழக முதல்வரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை அரசிடம் இருந்து பதில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

07:50 PM: மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தனது டிவிட்டரில், இந்தியா தனது மிகச்சிறந்த மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. தமிழகம் தனது தந்தையை இழந்துவிட்டது. கருணாநிதியை இழந்து தவிக்கும் தமிழக மக்களுக்கும், மு.க.ஸ்டாலின், கனிமொழி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களை தெரிவிக்கிறேன். கருணாநிதியின் இழப்பை எண்ணி இந்தியா வருந்துகிறது ” என்று பதிவிட்டுள்ளார்.

07:45 : திமுக தலைவர் மு. கருணாநிதியின் மறைவுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘‘மிகச்சிறந்த தலைவர் கருணாநிதி மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கு ஆளானேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அவரது மறைவு நாட்டிற்கு பெரும் இழப்பு’’ என்று பதிவிட்டுள்ளார்.

07:41 PM: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், தமிழக மக்களால் அதிகம் விரும்பப்பட்டவரும், தமிழக அரசியலில் 60 ஆண்டுகளுக்கும் அதிகமாக மிக நீண்ட பயணத்தையும், அழியாத் அடையாளத்தையும் கொண்ட பேருருவம் கருணாநிதி. அவரின் மறைவால், இந்தியா தனது சிறந்த மகனை இழந்துவிட்டது. அனைவராலும் விரும்பப்படும் மிகச்சிறந்த தலைவரை இழந்துவாடும் அவரின் குடும்பத்தாருக்கும், லட்சக்கணக்கான இந்தியர்களுக்கும் என ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

07:30 PM: திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பையொட்டி, 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

07:15 PM: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தனது டிவிட்டரில், “ஈடு செய்ய முடியாத இழப்பை சந்தித்து இருக்கும் கருணாநிதி அவர்களின் குடும்பத்திற்கு வலிமையை தர வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன். கருணாநிதியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

07:15 PM: ரஜினிகாந்த் தனது டிவிட்டரில், “என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

07:10 PM: 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த பெருமைக்குரியவர். கருணாநிதியின் இழப்பு தமிழகத்திற்கு பேரிழப்பு என தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

07:00 PM: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டிவிட்டரில், “திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

06: 55 PM: ‘இந்தியாவின் மாபெரும் தலைவரை இழந்துவிட்டோம்’ என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

06.50 PM: கருணாநிதி காலமானார் என்ற அறிவிப்பை தொடர்ந்து, காவேரி மருத்துவமனை முன்பு இருந்த தொண்டர்கள் கதறி அழுது வருகின்றனர்.

06: 40 PM: திமுக தலைவர் கருணாநிதி மாலை 06.10 மணியளவில் மருத்துவமனையில் காலமானார் என காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.

21

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்