sasikala-speech

தொண்டர்கள் மத்தியில் சசிகலாவின் முதல் அரசியல் உரை :

அதிமுக பொதுச்செயலாளராக விகே சசிகலா, சனிக்கிழமையன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் முதன்முறையாக உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தன்னை அதிமுக பொதுச்செயலாளராக ஒரு மனதாக தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார். ஜெயலலிதாவுக்கு கழகம்தான் வாழ்க்கை என்றும், தனக்கு ஜெயலலிதாதான் வாழ்க்கை என்றும் உருக்கமாகத் தெரிவித்தார். மேலும் அவர், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும் போராட்டமாக இருந்ததாகவும், தொண்டர்களின் பிரார்த்தனை அவரைக் காப்பாற்றி விடும் என தான் நம்பியிருந்ததாகவும் தெரிவித்தார்.

ஜெயலலிதா காட்டிய பாதையில் கட்சியின் பயணம் தொடரும் என்றும், மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, சிறப்பாகக் கொண்டாடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் எம்.ஜி.ஆரின். உருவம் பொறித்த நாணயம் மற்றும் தபால்தலைகளை வெளியிட மத்திய அரசை வலியுறுத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.

மதியம் 12.15 மணி :

* கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை

* அதிமுகவின் ஆறாவது மற்றும் இரண்டாவது பெண் பொதுச்செயலாளராகிறார் சசிகலா

நண்பகல் 12 மணி :

* அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்கவுள்ள சசிகலா, கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

sasikala-1

கருத்துகள் இல்லை