ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எட்டு வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞருக்கும், சிறுமியின் தந்தைக்கும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டம், ரசானா பகுதியைச் சேர்ந்த முஹமது யூசூஃப் என்பவரின் மகள் அசிஃபா என்ற எட்டு வயது சிறுமி, கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, காவலர்கள் உட்பட எட்டு பேர் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டனர்.

சிறுமி அசிஃபாவுக்கு நிகழ்ந்த கொடுமைக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து சண்டிகருக்கு மாற்ற வேண்டும் என சிறுமியின் தந்தை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கினை இன்று (திங்கட்கிழமை) விசாரித்த உச்சநீதிமன்றம், சிறுமியின் குடும்பத்துக்கும், சிறுமி தரப்புக்கு ஆஜராகும் வழக்கறிஞருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டடு, வழக்கின் விசாரணையை ஏப்.28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

முன்னதாக சிறுமி தரப்பில் ஆஜராகும் பெண் வழக்கறிஞர் தீபிகா சிங், இந்த வழக்கில் ஆஜராகும் தனக்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதாகவும், தானும் இதனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் எனவும் அச்சம் தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here