கடல்சார் செயல்பாடுகளைக் கண்காணிக்க ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1-எச் செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து, வியாழக்கிழமை மாலை 6.59 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி-39 (PSLV-C39) ராக்கெட் மூலம், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1-எச் (Indian Regional Navigation Satellite System – IRNSS) என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 29 மணி நேர ‘கவுண்ட்டவுன்’, புதன்கிழமை (நேற்று) மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கியது. இந்த செயற்கைக்கோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் மொத்த எடை 1425 கிலோ ஆகும்.

kiran

விண்ணில் செலுத்தப்பட்ட இந்த பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட், முதல் மூன்று நிலைகள் சரியாக இருந்தபோதிலும், நான்காவது நிலையில், வெப்பத்தடுப்பு அமைப்பு சரியாக பிரியாததால் செயற்கைக்கோளை நிலைநிறுத்த முடியவில்லை என இஸ்ரோ நிறுவன தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான காரணங்களை ஆராயவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ நிறுவனம் (Indian Space Research Organisation – ISRO) இதற்கு முன்னர், கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி IRNSS-1G என்ற செயற்கைக்கோளும், அதனைத்தொடர்ந்து, IRNSS-1F (மார்ச் 10, 2016), IRNSS-1E (ஜனவரி 20, 2016), IRNSS-1D (மார்ச் 28, 2015), IRNSS-1C (அக்டோபர் 16, 2014), IRNSS-1B (ஏப்ரல் 4, 2014) மற்றும் IRNSS-1A ( ஜூலை 1, 2013) ஆகிய ஏழு செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது.

இதையும் படியுங்கள்: படி, படி என்று வற்புறுத்துகிறார்களா ? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்