ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளநிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன்றன. ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், ரயில் மறியல் என பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகமே போராட்டக்களமாக மாறி வரும்நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ”தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை” என்ற பெயரில் புதிய அமைப்பொன்றைத் திரைப்படக் கலைஞர்கள் தொடர்ங்கியுள்ளனர். இது தொடர்பாக இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், தங்கர் பச்சான், வெற்றி மாறன், ஆர்கே செல்வமணி, கவுதமன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் செய்தியாளர்களை இன்று (ஏப்.9) சந்தித்தனர். அப்போது, ஐபிஎல் போட்டிகள் தமிழகத்தில் நடத்தக்கூடாது என்றனர்.

rajiv

ஆனால், திட்டமிட்டபடி சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்றும், ஐபிஎல் போட்டிகளை அரசியலாக்க வேண்டாம் என ஐபிஎல் தொடரின் சி.இ.ஓ. ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மைதானத்திற்குள் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் யாரும் செயல்படக்கூடாது, கருப்பு சட்டை அணிந்து வரக் கூடாது, இனவெறியைத் தூண்டும்வகையில் செயல்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

பட்டாசுகள், கேமராக்கள், குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரக்கூடாது என்றும், பேனர்கள், கொடிகளுக்கு தடை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றிலும் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

இதையும் படியுங்கள்: ’15 பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்