சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதையடுத்து டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டிகளை வேறு மாநிலத்துக்கு மாற்றுவதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டங்கள் தீவிரமடைந்து வரும்நிலையில் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக் கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் எதிர்ப்பையும் மீறி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (ஏப்.10) போட்டி நடைபெற்றது.

போட்டி நடைபெற்ற மைதானத்திலும், எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு காலணிகள் வீசப்பட்டன. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலரைப் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அடுத்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டிகளை விசாகப்பட்டிணம், புனே, ராஜ்கோட், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு மாற்றுவதற்கான ஆலோசனையும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ’15 பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்