சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரைப் போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன்றன. ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், ரயில் மறியல் என பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகமே போராட்டக்களமாக மாறி வரும்நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஏப்.10) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், மைதான நுழைவு வாயிலின் கதவுக்கு பூட்டுப் போடவும் முயற்சித்தனர். அப்போது பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்தனர்.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here