மும்பை இண்டியன்ஸ் அணிக்கு டுவிட்டரில் ஃபாலோயர்ஸ்கள் அதிகம் பேர் உள்ளனர். இந்த அணியைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத்தான் ஃபாலோயர்ஸ்கள் அதிகம்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎஸ் கிரிக்கெட் போட்டிகள், கடந்த ஏப்.7ஆம் தேதியன்று, மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

mi

ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் எட்டு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சமூக வலைத்தளமான டுவிட்டரில் சுமார் 47,80,000 ஃபாலோயர்ஸ்கள் உள்ளனர்.

chennai

இதற்கு அடுத்தபடியாக, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சுமார் 41 லட்சம் ஃபாலோயர்ஸ்களும், காலிஸ் தலைமையிலான கொல்கத்தா நைட்ஸ் ரைடர்ஸ் அணிக்கு 38.1 லட்சம் ஃபாலோயர்ஸ்களும் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து விராத் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு சுமார் 30.6 லட்சம் ஃபாலோயர்ஸ்களும், டாம் மூடி தலைமையிலான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு 18.7 லட்சம் ஃபாலோயர்ஸ்களும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்கு 17.7 லட்சம் ஃபாலோயர்ஸ்களும், ரிக்கி பாண்டிங் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 12 லட்சம் ஃபாலோயர்ஸ்களும் உள்ளனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்