இலங்கை அணிக்கெதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இரண்டு டி-20 போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி கட்டாக் நகரின் புதன்கிழமை (இன்று) நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். இந்திய அணியின் ஸ்கோர் 38ஆக இருந்தபோது, மாத்யூஸ் பந்து வீச்சில் ரோகித் ஷர்மா அவுட்டாகி வெளியேறினார். அவர் 13 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 24 ரன்களுடன் அவுட்டானார்.

cri-1

இந்திய அணியில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 61 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்சரும், ஏழு பவுண்டரிகளும் அடங்கும். இதனைத்தொடர்ந்து ஆடிய தோனி 39 ரன்களுடனும், பாண்டே 32 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

இலங்கை அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைச் சந்தித்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக தாரங்கா மட்டும் 23 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து பெரேரா 19 ரன்களுடனும், டிக்வெல்லா 13 ரன்களுடனும், சமீரா 12 ரன்களுடனும் அவுட்டாகினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.

இதையும் படியுங்கள்: ராமர் பாலத்தைப் பற்றி “சயின்ஸ் சேனல் ” சொல்வதென்ன ?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்