நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி புனேயில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குப்தில் மற்றும் முன்ரோ ஆகியோர் சொற்ப ரன்களின் அவுட்டாகி வெளியேறினர். நியூசிலாந்து அணி 58 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

cri

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹென்றி நிக்கோல்ஸ் 42 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

cri-2

இதனையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரோஹித் ஷர்மா ஏழு ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராத் கோலி 29 ரன்களுடனும், ஷிகர் தவான் 68 ரன்களுடனும் அவுட்டாகினர். ஆட்டநேர இறுதியில் இந்திய அணி 46 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்