நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவாண் ஆகியோர் களமிறங்கினர். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய ரோகித் ஷர்மா மற்றும் விரோத் கோலி ஆகியோர் சதமடித்தனர். ரோஹித் ஷர்மா 138 பந்துகளில் 147 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்சர்களும் 18 பவுண்டரிகளும் அடங்கும்.

virat

அதேபோன்று விராத் கோலி 106 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்சர் மற்றும் ஒன்பது பவுண்டரிகள் அடங்கும். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குப்தில் மற்றும் முன்ரோ ஆகியோர் அதிரடியாக ஆடத் தொடங்கினர்.

cri-2

நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 44ஆக இருந்தநிலையில் குப்தில் அவுட்டனார். அவரைத் தொடர்ந்து ஆடிய முன்ரோ, வில்லியம்சன் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். முன்ரோ 62 பந்துகளில் 75 ரன்களுடனும், வில்லிம்சன் 84 பந்துகளில் 64 ரன்களுடனும், லாதம் 65 ரன்களுடனும் அவுட்டாகி வெளியேறினர்.

cri-1

ஆட்ட நேர இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் எடுத்து தோல்வியைச் சந்தித்தது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா அணி தொடரை வென்றது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்