இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி, செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவாண் ஆகியோர் களமிறங்கினர். இதில் எட்டு ரன்கள் எடுத்தநிலையில் ரோஹித் ஷர்மா அவுட்டாகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து, விராத் கோலியும் டக் அவுட்டானர். இது ரசிகர்ளைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்திய அணி 27 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜாதவ் மட்டும் 27 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா 25 ரன்கள் எடுத்தார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து, 118 ரன்கள் மட்டுமே எடுத்தது.

cri
இதனையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபின்ச் மற்றும் வார்னர் களமிறங்கினர். ஆனால் இருவரும் எட்டு மற்றும் இரண்டு ரன்களின்ல் அவுட்டாகி வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி 13 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இதன் பின்னர் களமிறங்கிய ஹென்றிகியூஸ் மற்றும் ஹெட் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். அவர்கள் இருவரும் முறையே 62 மற்றும் 48 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 15.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

மூன்றாவது டி-20 போட்டி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் வரும் அக்.13ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

இதையும் படியுங்கள்: வீரம் 2 படத்துக்கு அஜித் பச்சைக்கொடி…?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்