இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான வெள்ளிக்கிழமை (இன்று) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருந்த மூன்றாவது டி-20 போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி, டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்று பெற்றிருந்தது. இதனையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

cri

இதனால் மூன்றாவது டி-20 போட்டியில் வெற்றிபெற்று யார் தொடரைக் கைப்பற்றுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்: “நடராஜனின் உறுப்பு மாற்றத்தை விமர்சிப்பது சரியல்ல”: தமிழிசையிடமிருந்து முரண்படும் எஸ்.வி.சேகர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்