இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் ஃபிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். முதலில் இருந்தே இருவரும் நிதானமாக விளையாடினர்.

cri-1

இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உச்சத்தில் கொண்டு சென்றனர். முதல் விக்கெட்டே 231 ரன்களில்தான் விழுந்தது. 124 ரன்கள் எடுத்த நிலையில் வார்னர் அவுட்டாகி வெளியேறினார். அவர் 119 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார். அதில் நான்கு சிக்சர்களும், 12 பவுண்டரிகளும் அடங்கும்.

ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 231ஆக இருந்தபோதே ஃபிஞ்ச்-ம் அவுட்டாகி வெளியேறினார். அவர் 96 பந்துகளில் 94 ரன்கள் எடுத்திருந்தார். இதில் மூன்று சிக்சர்களும், 10 பவுண்டரிகளும் அடங்கும்.

cri

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக யாதவ் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

cri-2

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரஹானே மற்றும் ஷர்மா ஆகியோர் நிதானமாக ஆடினர். இந்திய அணியின் ஸ்கோர் 106ஆக இருந்தபோது ரஹானே அவுட்டாகி வெளியேறினார். அவர் 55 பந்துகளில் 65 ரன்கள் எடுத்திருந்தார். இதில்
ஐந்து சிக்சர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும்.

இதனைத் தொடர்ந்து விளையாடிய விராத் கோலி 21 ரன்கள் எடுத்தநிலையில் அவுட்டாகி வெளியேறினார். அதேபோன்று, ரஹானே 53 ரன்களும், பாண்டியா 41 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணியின் ஸ்கோர் 251 ரன்களாக இருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் சிறிதுநேரம் ஆட்டம் தடைப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் ஆட்டம் துவங்கியது. ஜாதவ் 67 ரன்களுடனும், பாண்டே 33 ரன்களுடனும், தோனி 13 ரன்களுடனும் அவுட்டாகி வெளியேறினர். ஜாதவ் 67 ரன்களுடனும், பாண்டே 33 ரன்களுடனும், தோனி 13 ரன்களுடனும் அவுட்டாகி வெளியேறினர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்து தோல்வியைச் சந்தித்தது.

ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, வரும் அக்.1ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதையும் படியுங்கள்: செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்