ஆஸ்திரேலியா அணிக்கெதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சென்னை, கொல்கத்தா, இந்தூரில் நடைபெற்ற முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பெங்களூரு சின்னச்சாமி நடந்த நான்காவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரை இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாக்பூரில் ஞாயிற்றுக்கிழமை (அக்.1) நடைபெற்றது.

i2

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் ஃபிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். இதில் வார்னர் 53 ரன்களுடனும், ஃபிஞ்ச் 32 ரன்களுடனும் அவுட்டாகி வெளியேறினர். கேப்டன் ஸ்மித் 16 ரன்களும், ஹாண்ட்ஸ்கோம்ப் 13 ரன்களுடனும், ஹெட் 42 ரன்களுடனும் அவுட்டாகி வெளியேறினர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில், ஆஸ்திரேலிய அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 242 ரன்களை எடுத்தது. இந்திய அணி பந்துவீச்சாளர்களில் அக்ஸார் படேல் மூன்று விக்கெட்டுகளையும், பும்ரா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

i

இதனையடுத்து 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே மற்றும் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில், இந்திய அணியின் ஸ்கோர் 124ஆக இருந்தபோது ரஹானே அவுட்டாகி வெளியேறினார். அவர் 74 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து ஆடிய ஷர்மா 109 பந்துகளில் 125 ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினார். இதில் ஐந்து சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும். இந்திய அணி 42.5 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இதையும் படியுங்கள்: ஸ்மார்ட்ஃபோனில் செக்ஸ் படங்களைப் பார்ப்பவரா நீங்கள்? இதைக் கேளுங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்