இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இதையும் படியுங்கள் : இறைச்சிக் கூடங்களை மூட உத்தரவிட்ட யோகி ஆதித்யநாத்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில், கடந்த வியாழக்கிழமையன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

இதையும் படியுங்கள் : அதிமுகவின் பலவீனத்தைத் தெரிந்து கொண்டு மிரட்டிய சூலூர் எம்.எல்.ஏ

இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 137.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 451 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்மித் 178 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக மாக்ஸ்வெல் 104 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் வீரர் ஜடேஜா சிறப்பாக பந்துகளை வீசி ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையும் படியுங்கள் : திமுகவின் முரசொலி இணையதளம் முடக்கப்பட்டது ஏன்?

இதனையடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி, 603 ரன்கள் எடுத்திருந்தநிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதில் புஜாரா இரட்டை சதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புஜாராவுக்கு இது 3வது இரட்டை சதம் ஆகும். அவர் 525 பந்துகளில் 21 பவுண்டரிகளுடன் 202 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையும் படியுங்கள் : “என்னுடைய பாடல்களை எஸ்.பி.பி பாடக்கூடாது” : இளையராஜா

இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்தது. இதில் ஆறு விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தநிலையில் ஐந்தாவது நாள் ஆட்டம் நிறைவடைந்ததை அடுத்து ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளிக் கணக்கில் சமநிலையில் உள்ளன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்